தோமி தோமஸின் புத்தக வெளியீடு தொடர்பான விசாரணைகளுக்கு உதவுவதற்காக வான் அசிசாவிற்கு அழைப்பாணை (summon)

கோலாலம்பூர், ஜனவரி 28 :

முன்னாள் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் இன்று பிற்பகல் 3 மணிக்கு புக்கிட் அமானுக்கு வரவழைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநர் டத்தோஸ்ரீ அப்துல் ஜலீல் ஹசான் இதுபற்றிக் கூறுகையில், முன்னாள் சட்டமா அதிபர் டான்ஸ்ரீ தோமி தோமஸ் எழுதிய My Story: Justice in the Wilderness புத்தகத்தின் வெளியீடு தொடர்பான விசாரணைகளுக்கு உதவுவதற்காக வான் அசிசா அழைக்கப்பட்டதாகக் கூறினார்.

“ஆம், அது உண்மைதான் (புக்கிட் அமானுக்கு வான் அசிசா வரவழைக்கப்பட்டுள்ளார்) இது ஒரு சாதாரண விசாரணை நடைமுறை” என்று அவர் மேலும் கூறினார்.

முன்னதாக, தனது புத்தகத்தில் தோமஸ் செய்த குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் சிறப்புப் பணிக்குழு, அதன் முதல் கூட்டத்தை டிசம்பர் 23 அன்று கூட்டாட்சி தலைநகரில் நடத்தியதாக ஊடகங்கள் தெரிவித்தன.

நீதிபதிகள் நியமனம், நீதித்துறையில் நிர்வாகிகளின் அதிகப்படியான தலையீடு, தேர்ந்தெடுக்கப்பட்ட வழக்குகள் என புத்தகத்தில் உள்ள பல குற்றச்சாட்டுகள் குறித்து முதற்கட்ட ஆய்வு நடத்த சிறப்புக் குழு அமைக்கப்பட்டது.

தோமஸ் கடந்த ஆண்டு தொடக்கத்தில் புத்தகத்தை வெளியிட்டார், ஆனால் அது தூண்டுதல், அவமதிப்பு மற்றும் அவதூறு போன்ற கூறுகளைக் கொண்டதாகக் கூறப்படும் அட்டர்னி-ஜெனரல் திணைக்களம், வழக்கறிஞர்கள், அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்கள் உட்பட பல்வேறு தரப்பிலிருந்து நிறைய விமர்சனங்களைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here