13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கட்டுமானத் தொழிலாளி ஒருவர் மீது குற்றச்சாட்டு

சுக்கை, டிசம்பர் 6 :

கடந்த அக்டோபரில் 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டின் பேரில், கட்டுமானத் தொழிலாளி ஒருவர் மீது இன்று செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது. ஆனால் குற்றஞ்சாட்டப்பட்டவர் தான் குற்றவாளி இல்லை என்று மறுப்புத்தெரிவித்து விசாரணை கோரினார்.

நீதிபதி வான் சுஹைலா முஹமட் முன்னிலையில் குற்றஞ்சாட்டப்பட்ட 26 வயதான குற்றவாளி, தான் குற்றவாளி இல்லை என்று வாக்குமூலம் அளித்தார்.

குற்றச்சாட்டின்படி, அக்டோபர் 8 ஆம் தேதி இரவு 9.15 மணி முதல் 11.30 மணி வரையுள்ள காலப்பகுதியில், 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

இவ்வழக்கு தண்டனைச் சட்டத்தின் பிரிவு 376 (1) இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது குற்றம் நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் பிரம்படிகள் விதிக்க வழிசெய்கிறது.

இந்த வழக்கை அரசு துணை வழக்கறிஞர் நூர் அஜானி அஸ்மான் நடத்தினார்.

குற்றவாளி குற்றத்தை ஒப்புக்கொள்ளாது விசாரணை கூறியதை தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்டவருக்கு RM10,000 மதிப்புள்ள ஜாமீனுடன் ஒரு ஆள் பிணையும் வழங்க உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு முடியும் வரை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கும் எந்தவித இடையூறு செய்யக் கூடாது என்று நிபந்தனையம் விதித்தார்.

இந்த வழக்கு எதிர்வரும் ஜனவரி 23-ம் தேதிக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here