பிரதமரின் தாய்லாந்து விஜயத்தின் போது தாய்லாந்து-மலேசியா VTL பயணப்பாதை தொடர்பில் விவாதிக்கப்படும்

கோலாலம்பூர், டிசம்பர் 7 :

ஓமிக்ரான் வைரஸ் மாறுபாடு பற்றிய கவலைகள் இருந்தபோதிலும், மலேசியா- தாய்லாந்து இடையேயான தடுப்பூசிப் பயணப்பாதை (VTL) சாதகமான முன்னேற்றங்களைக் காணும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று வெளியுறவு அமைச்சர் டத்தோ சைபுடின் அப்துல்லா தெரிவித்தார்.

வட மலேசியா மற்றும் தாய்லாந்து எல்லையின் தெற்கில் தரைவழிப் பாதைகளுக்கான VTL செயல்படுத்துவது தொடர்பான விவாதங்கள் பிரதமரின் அதிகாரப்பூர்வ பணிப் பயணத்தின் மூலம் மேலும் விவாதிக்கப்படும் என்றார்.

எதிர்வரும் டிசம்பர் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில், டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பின் உத்தியோகபூர்வ தாய்லாந்து விஜயத்தின் போது, மலேசியா மற்றும் தாய்லாந்து இடையே தடுப்பூசிப் பயணப்பாதை (VTL) பற்றிய விவாதங்களில் கவனம் செலுத்தப்படும் என்று அவர் மேலும் விளக்கினார்.

சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் இந்தோனேசியாவைத் தவிர வேறு பல நாடுகளுடனும் இந்த VTL திடடத்தை செயல்படுத்துவது தொடர்பில் நாங்கள் விவாதித்துள்ளோம்.

“பிரதமர் டிசம்பர் 29 மற்றும் 30 ஆம் தேதிகளில் தாய்லாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்வதால் மலேசியா-தாய்லாந்து VTL இல் சில முன்னேற்றங்கள் இருக்கும்,” என்று அவர் இன்று, வெளியுறவுக் கொள்கை கட்டமைப்பை அறிமுகப்படுத்திய பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here