பள்ளி விடுதியில் மூத்த மாணவரின் துணிகளை துவைக்க மறுத்த இளைய மாணவன் மீது தாக்குதல்

கூலிம், டிசம்பர் 9 :

பகிடிவதை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து, படிவம் ஒன்று மாணவரின் கையை உடைத்தது தொடர்பில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த புதன்கிழமை பள்ளி விடுதியில், தனது மூத்த மாணவர் (Senior) ஒருவரின் துணிகளை துவைக்க மறுத்ததால் தான் தாக்கப்பட்டதாக பாதிக்கப்பட்டவர் (Junior)  கூறினார்.

சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் ஒரு நாளுக்குப் பிறகு, பாதிக்கப்பட்டவரின் தாயார் அவரை கூலிம் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்துச் சென்றபோது, ​​​​அவரது வலது கை வலிக்கிறது என்று புகார் அளித்த பின்னர் இந்த சம்பவம் வெளிப்பட்டது.

“அதற்கு முன், வியாழன் நண்பகல் சிறுவனின் தாயிடம் தனக்கு கையில் வலி இருப்பதாகப் புகார் கூறியபோது அவனை அழைத்துச் செல்ல பாதிக்கப்படட சிறுவனின் தாய் பள்ளியை தொடர்புகொண்டு, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

சோதனையில், அடிகாயத்தால் சிறுவனின் கை உடைந்திருப்பது தெரியவந்தது.

இச் சம்பவம் தொடர்பில் “சிறுவனின் தந்தை காவல்துறையில் புகார் அளித்தார்.”

புதன்கிழமை பிற்பகுதியில் முத்த மாணவர் ஒருவரின் துணியைத் துவைக்க மறுத்ததால்அந்தச் சிறுவன் மூத்த மாணவர்கள் குழுவால் தாக்கப்பட்டதாக பாதிக்கப்பட்டவர் கூறினார்.

கூலிம் மாவட்ட போலீஸ் தலைமைக் கண்காணிப்பாளர் சசாலி ஆடாம் இந்தச் சம்பவம் தொடர்பில் போலீஸ் அறிக்கையைப் பெற்றதை உறுதிப்படுத்தினார் மேலும் இது குறித்து போலீஸ் விசாரணை நடந்து வருகிறது குறிப்பிடத்தக்கது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here