உலகின் இரண்டாவது உயரமான கட்டிடம் மலேசியாவின் Merdeka 118

மெர்டேக்கா 118, இது மலேசியாவின் தலைநகரமான கோலாலம்பூர் மாநிலத்தில்  நிறுவப்பட்டுள்ளது. இந்த கட்டிடம் 118 மாடிகளைக் கொண்டு, 678.9 மீட்டர் உயரத்துடன் ஒரு மெகா வானளாவிய கட்டிடமாக நிற்கிறது.

மலாய் மொழியில் மெர்டேக்கா என்பது தமிழில் ‘சுதந்திரம்’ என்று பொருள்படும்.  ஸ்டேடியம் மெர்டேக்கா  மற்றும் ஸ்டேடியம் நெகாரா எனும் இரண்டு வரலாற்று அரங்கங்களால் இந்தக் கட்டிடத்திற்கும் மெர்டேக்கா 118 என பெயர் சூட்டியுள்ளனர். 

மெர்டேக்கா 118 கோபுரம் புர்ஜ் கலிஃபாவிற்குப் (Burj Khalifa) பின் உலகின் இரண்டாவது உயரமான கட்டிடமாகவும், மலேசியாவின் மிக உயரமான கட்டிடமாகவும் அமைந்துள்ளது. 

இரட்டைக் கோபுரம் சுமார் 451.9 மீட்டர் உயரத்தில் இருந்து, உலகின் மிக உயரனமான கோபுரமாக முன்பு இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்றைய உலக உயர கோபுரங்களின் பட்டியலில் இரட்டைக் கோபுரம் ஐந்தாவது இடத்தில் உள்ளது.

மெர்டேக்கா 118 கட்டிடத்திற்கு Permodalan Nasional Berhad (PNB) மூலம் நிதியளிக்கப்பட்டது. 19 ஏக்கர் நிலம், 400,000 சதுர மீட்டர் (4,300,000 சதுர அடி) குடியிருப்பு, ஹோட்டல், வணிக மற்றும் பொது இடங்களைக் கொண்டு அமைந்துள்ளது. இந்த கட்டிடம் பெட்டாலிங் ஹில்லில் அமைந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here