ஈப்போ, டிசம்பர் 11 :
நேற்றிரவு பெய்த கனமழையால், தாமான் செம்பாக்கா குடியிருப்பு பகுதியை சுற்றியுள்ள பல இடங்களில் உள்ள வீடுகள் திடீரென வெள்ளத்தில் மூழ்கின.
சமூக ஊடகங்களில் பரவிய சில படங்களின் அடிப்படையில், அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த பல வாகனங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
மலேசியாவின் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (JBPM) பேராக் மாநில செய்தித் தொடர்பாளர் கூறுகையில், அப்பகுதியில் நீர் மட்டம் 0.6 மீட்டர் வரை உயர்ந்துள்ளதாகவும் நேற்றிரவு 9.07 மணிக்கு வெள்ளம் தொடர்பில் தமது துறைக்கு அழைப்பு வந்தததை தொடர்ந்து, ஈப்போ தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் (BBP ) உறுப்பினர்கள் அந்த இடத்திற்கு அனுப்பப்பட்டதாகவும் கூறினார்.
“நள்ளிரவு 12.45 மணி நிலவரப்படி, நீர்மட்டம் குறைந்துள்ளதாகவும் தீயணைப்புப் படையினர் தொடர்ந்து அப்பகுதியை கண்காணித்து வருவதாகவும் கூறினார்.























