பெட்டாலிங் ஜெயா, பிப்ரவரி 17 :
இன்று காலை 8.50 மணிக்கு, இங்குள்ள தாமான் மாஜூ ஜெயாவிற்கு அருகில் உள்ள பந்தாய் பாரு நெடுஞ்சாலையின் (NPE) 19 ஆவது கிலோமீட்டரில், லோரி மற்றும் மோட்டார் சைக்கிளை உட்படுத்திய விபத்தில், 24 வயது பெண் ஒருவர் உயிரிழந்தார்.
பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல்துறையின் தலைமை துணை ஆணையர் முகமட் ஃபக்ருடின் அப்துல் ஹமீத் கூறுகையில், இந்த விபத்தில் ஒரு மோட்டார் சைக்கிளும் லோரியும் மோதிக்கொண்டன.
முதற்கட்ட விசாரணையில், பாதிக்கப்பட்டவர் வலதுபுறப் பாதையில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்று கொண்டிருந்தபோது, லோரியின் மீது உரசியதால், அவர் கீழே விழுந்தார்.
“விபத்தின் விளைவாக, பாதிக்கப்பட்டவர் சம்பவ இடத்திலேயே இறந்தது உறுதி செய்யப்பட்டது,” என்று அவர் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
விபத்துக்கான காரணத்தை கண்டறிய, மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, சம்பவத்தை நேரில் கண்டவர்களோ அல்லது சம்பவ இடத்தில் இருப்பவர்களோ, போக்குவரத்து புலனாய்வு அதிகாரியான இன்ஸ்பெக்டர் ஆர்.நாவலனை 014-2536820 என்ற எண்ணிலோ அல்லது அருகிலுள்ள ஏதேனும் காவல் நிலையத்திலோ தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.










