பேராக்கில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் குடும்ப வன்முறை தொடர்பான 551 வழக்குகள் பதிவு

ஈப்போ, டிசம்பர் 13 :

கடந்த ஆண்டு மார்ச் முதல் இந்த ஆண்டு நவம்பர் வரையில், பேராக் மாநிலத்தில் 551 குடும்ப வன்முறை புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக்க மாநில பெண்கள் மேம்பாடு, குடும்பம் மற்றும் சமூக நலக் குழுவின் தலைவர் டத்தோ டாக்டர் வான் நோராஷிகின் வான் நூர்டின் தெரிவித்துள்ளார்.

பேராக் காவல்துறையின் புள்ளிவிவரங்களின்படி, கடந்த ஆண்டு மார்ச் மற்றும் டிசம்பருக்கு இடையில் 277 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் இந்த ஆண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரை, மொத்தம் 274 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வான் நோராஷிகின் கூறினார்.

“இருப்பினும், பேராக் சமூக நலத் துறையின் புள்ளிவிவரங்களின் அடிப்படையில், கடந்த ஆண்டு ஜனவரி முதல் இந்த ஆண்டு நவம்பர் வரையிலான காலகட்டத்தில் 133 குடும்ப வன்முறை வழக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன.

மேலும் “மூன்று மாவட்டங்களில் அதிக குடும்ப வன்முறை வழக்குகள் பதிவாகியுள்ளன, அதாவது கிண்டா மாவட்டத்தில் 39 வழக்குகள், லாரூட், மாதங் மற்றும் செலாமா (LMS) 22 வழக்குகள் மற்றும் மஞ்சாங் 21 வழக்குகள்,” என்றும் அவர் கூறினார்.

இன்று மாநிலங்களவை அமர்வில் சல்பியா முகமது (BN-Temengor) கேட்ட கேள்விக்கு அவர் பதிலளித்தார்.

பாலியல் பலாத்காரம், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், ஆபாசமாக நடந்துகொள்ளுதல் மற்றும் ஆபாசப் பழக்கம் ஆகியவற்றுடன் தொடர்புடைய பாலியல் குற்ற வழக்குகளின் எண்ணிக்கை 311 பதிவாகின. அவற்றில் கடந்த ஆண்டு மார்ச் முதல் டிசம்பர் வரை மொத்தம் 146 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகவும், இந்த ஆண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் 165 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும் “கற்பழிப்பு குற்றங்கள் மிக அதிகமாக உள்ளன என்றும் அதேகாலப்பகுதியில் 144 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதற்கிடையில், கடந்த ஆண்டு மார்ச் முதல் இந்த ஆண்டு அக்டோபர் வரை ஆபாசமான பாலியல் துன்புறுத்தல் வழக்குகளின் எண்ணிக்கை 22 ஆக பதிவாகியுள்ளது என்றார்.

“போலீஸ் விசாரணையின் அடிப்படையில், குடும்ப வன்முறைக்கான காரணிகளில் போதைப் பழக்கம், நிதி சிக்கல்கள், தனிப்பட்ட பிரச்சினைகள், மது போதை மற்றும் விவாகரத்து போன்றவை குறிப்பிடத்தக்கவை ,” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here