மூன்று தடுப்பூசி டோஸ்களையும் பெற்ற கோவிட் -19 நோயாளிகளின் அறிகுறியற்ற நெருங்கிய தொடர்புகள் இனி கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தபட மாட்டார்கள் என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் அறிவித்துள்ளார். ஒரு செய்தியாளர் கூட்டத்தில், புதிய அமல் மார்ச் 1 முதல் நடைமுறைக்கு வரும் என்று கைரி கூறினார்.
இருப்பினும், இந்த அறிகுறியற்ற நெருங்கிய தொடர்புகள் முதல் மற்றும் மூன்றாவது நாளில் RTK- ஆன்டிஜென் கோவிட் -19 சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். சில லேசான அறிகுறிகளைக் காட்டும் நெருங்கிய தொடர்புகள் பூஸ்டர் டோஸைப் பெற்றிருந்தாலும் கட்டாயமாக ஐந்து நாள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று கைரி மேலும் கூறினார்.



















