நாட்டில் 97.3 விழுக்காடு பெரியவர்கள் கோவிட்-19க்கு எதிராக முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்

கோலாலம்பூர், டிசம்பர் 13 :

நேற்று இரவு 11.59 மணி நிலவரப்படி, நாட்டில் உள்ள பெரியவர்களில் 22,774,778 நபர்கள் அல்லது 97.3 விழுக்காட்டினர் கோவிட்-19க்கு எதிராக முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் COVIDNOW போர்ட்டலின் அடிப்படையில், 23,096,370 நபர்கள் அல்லது 98.7 விழுக்காட்டினர் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியை செலுத்திக்கொண்டுள்ளனர். மேலும் 1,031,946 நபர்கள் அல்லது 4.4 விழுக்காட்டினர் இதுவரை கோவிட்-19க்கு எதிராக தடுப்பூசியை செலுத்தவில்லை .

பதின்ம வயதினரில், 2,724,110 பேர் அல்லது 86.5 விழுக்காட்டினர் தடுப்பூசியின் இரு அளவையும் செலுத்திக்கொண்டுள்ளனர், அதே நேரத்தில் 2,825,229பேர் அல்லது 89.7 விழுக்காட்டினர் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியை செலுத்திக்கொண்டுள்ளனர். மேலும் 322,271 நபர்கள் அல்லது 10.3 விழுக்காட்டினர் இதுவரை கோவிட்-19க்கு எதிராக தடுப்பூசியை செலுத்தவில்லை .

நேற்று விநியோகிக்கப்பட்ட 67,376 தடுப்பூசிகளில் 1,472 தடுப்பூசிகள் முதல் டோஸாகவும், 2,005 தடுப்பூசிகள் இரண்டாவது டோஸாகவும் மற்றும் 63,899 தடுப்பூசிகள் பூஸ்டர் டோஸாகவும் பயன்படுத்தப்பட்டது. இது தேசிய கோவிட்-19 நோய்த்தடுப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மொத்த தடுப்பூசி அளவுகளின் எண்ணிக்கையை 54,891,289 ஆகக் கொண்டு வந்ததுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here