கிளாந்தானில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் மக்களின் ஆர்வம் குறைந்துள்ளது ; மாநில சுகாதார இயக்குநர் கவலை

கோத்தா பாரு, டிசம்பர் 15 :

கிளாந்தானில் கோவிட்-19 பூஸ்டர் தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டுள்ள 18 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்களின் எண்ணிக்கை, அவற்றைப் பெறத் தகுதியானவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது மிகக் குறைவாகவே உள்ளது என்று மாநில சுகாதார இயக்குநர் டத்தோ டாக்டர் ஜைனி ஹுசின் கூறினார்.

நேற்றைய நிலவரப்படி, 90,316 பெரியவர்கள் பூஸ்டர் தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டுள்ளதாக சுகாதாரத் திணைக்களம் பதிவு செய்துள்ளது. இந்த தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் (90,316 பேர்) மூன்றாவது தடுப்பூசி டோஸுக்கு தகுதியுடையவர்களில் 73.71 விழுக்காடாகும் என்று அவர் கூறினார்.

“மாநிலத்தின் பெரியவர்களில் 12.19 விழுக்காடு பூஸ்டர் டோஸ்களை செலுத்திக்கொண்டவர்கள் உள்ள இடமாக கோத்தா பாரு அதிக எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது, அதைத் தொடர்ந்து முறையே கோலக்கிராய் (5.50 விழுக்காடு), தனா மேரா (5.36 விழுக்காடு), பாச்சோக் (5.35 விழுக்காடு), பாசீர் புத்தே (5.24 விழுக்காடு ) மற்றும் மச்சாங் (5.21 விழுக்காடு) ஆகிய மாவட்டங்களும் பதிவுசெய்துள்ளன.

“கிளாந்தானில் உள்ள மற்ற நான்கு மாவட்டங்களும் ஐந்து விழுக்காட்டிற்கும் குறைவாகவே பதிவு செய்துள்ளன,” என்று அவர் இன்று கோவிட்-19 தடுப்பூசி மையத்திற்குச் சென்ற பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.

பலர் பூஸ்டர் தடுப்பூசி முக்கியமில்லை மற்றும் கட்டாயமில்லை என்று நம்புகின்றனர், அதனாலேயே பூஸ்டர் தடுப்பூசி செலுத்துபவர்களது தொகை குறைவாக உள்ளது என்று டாக்டர் ஜைனி தெரிவித்தார்.

மேலும் முதியவர்கள் மற்றும் நாட்பட்ட நோய்கள் உள்ளவர்கள் தங்கள் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள ஊக்குவிக்கப்படுகிறார்கள், ஏனெனில் இது நோய்த்தொற்றுகளிலிருந்து பாதுகாக்கும் மற்றும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று டாக்டர் ஜைனி கூறினார்.

“மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் சுகாதார கிளினிக்குகள் பொதுமக்களுக்கு பூஸ்டர் தடுப்பூசிகளை வழங்குகின்றன,” என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here