சுகாதார அமைச்சகம் கடந்த 24 மணி நேரத்தில் 4,262 கோவிட் -19 தொற்றுகளை பதிவு செய்துள்ளது. இது நேற்று 3,900 தொற்றுகளாக இருந்தது. மொத்த நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை இப்போது 2,707,402 தொற்றுகளாக உள்ளது என்று சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார். 4,985 நோயாளிகள் குணமடைந்துள்ளனர் என்றார்.
இதற்கிடையில், 383 நோயாளிகள் தீவிர சிகிச்சை பிரிவுகளில் (ICU) உள்ளனர். அவர்களில் 284 பேர் கோவிட்-19 தொற்றும் மற்றும் 99 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறார்கள். ICU இல் உள்ள நோயாளிகளில், 198 பேருக்கு சுவாச உதவி தேவைப்பட்டது. 135 பேர் கோவிட்-19 க்கு தொற்று எனவும் மீதமுள்ள 63 பேருக்கு தொற்று இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறார்கள்.
இன்று 4,226 உள்ளூர் நோய்த்தொற்றுகள் உள்ளன. இதில் 4,041 மலேசியர்கள் மற்றும் 185 வெளிநாட்டினர் மற்றும் 36 இறக்குமதி செய்யப்பட்ட தொற்றுகள் உள்ளன. இதில், நோயறிதலின் போது 1.8% நோயாளிகள் மட்டுமே வகை 3, 4 அல்லது 5 இல் இருந்தனர். இன்று ஆறு கொத்துகள் பதிவாகியுள்ளதாக நூர் ஹிஷாம் கூறினார்.




















