முழு தடுப்பூசி போட்டு கொண்டவர்கள் மட்டுமே கிறிஸ்துமஸ் கொண்டாட மற்றவர்கள் இல்லம் செல்ல முடியும்

இந்தாண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது  வீடு வீடாக கரோல் செய்வது அனுமதிக்கப்படாது என்றும், முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு மட்டுமே வீடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப்படும் என்றும் தேசிய ஒற்றுமை அமைச்சர் ஹலிமா சாதிக் தெரிவித்தார். இந்த நிகழ்விற்கான SOP களை அறிவிக்கும் அறிக்கையில், முஸ்லீம் அல்லாத வழிபாட்டு இல்லங்களுக்கான தற்போதைய SOP களின் படி வழிபாடு அனுமதிக்கப்படும் என்று அவர் கூறினார்.

தேவாலயத்தில் பாடகர் நிகழ்ச்சிகள் அனுமதிக்கப்படும் அதே வேளையில், பாடகர் குழு உறுப்பினர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் மற்றும் முக கவசம் அணிய வேண்டும். கிறிஸ்மஸ் பஜார்களை திறப்பது உள்ளூர் அதிகாரிகளின் ஒப்புதலைப் பொறுத்தது என்றும் அவர் கூறினார்.

டிசம்பர் 24 மற்றும் 25 ஆம் தேதிகளுக்கான SOP கள் செவ்வாயன்று 10ஆவது கோவிட் -19 அமைச்சர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு அங்கீகரிக்கப்படும் என்று ஹலிமா கூறினார். கிறிஸ்துமஸைக் கொண்டாடும் போது முகக்கவசம் அணிவது மற்றும் உடல் ரீதியான தூரத்தை பராமரிப்பது போன்ற SOP களை எப்போதும் கடைபிடிக்குமாறு அவர் கிறிஸ்தவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

முன்னதாக இன்று, சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின், கிறிஸ்துமஸ் அல்லது புத்தாண்டைக் கொண்டாட சிறிய, தனிப்பட்ட கூட்டங்கள் கலந்துகொள்பவர்கள் முன்பே சுய பரிசோதனைகளை மேற்கொண்டிருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றார்.

இன்று கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூரில் தைப்பூசக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ள இடங்களுக்குச் சென்ற ஹலிமா, ஜனவரி 18 சமயப் பண்டிகைக்கான SOPகளை விரைவில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here