சுகாதார அமைச்சகம் கடந்த 24 மணி நேரத்தில் 4,083 கோவிட்-19 தொற்றுகளை பதிவு செய்துள்ளது. இது நேற்றைய 4,362 தொற்றுகளில் இருந்து குறைந்துள்ளது. மொத்த நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை இப்போது 2,715,847 தொற்றுகளாக உள்ளது என்று சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
5,435 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். அதே நேரத்தில் 391 நோயாளிகள் தீவிர சிகிச்சையில் உள்ளனர். அவர்களில் 314 பேர் கோவிட்-19 தொற்று எனவும் மற்றும் 77 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறார்கள். 215 நோயாளிகளுக்கு சுவாச உதவி தேவைப்பட்டது. 145 நோயாளிகள் கோவிட்-19 தொற்று எனவும் மற்றும் மீதமுள்ள 77 பேர் தொற்று இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறார்கள்.
இன்று 4,049 உள்ளூர் நோய்த்தொற்றுகள் உள்ளன. இதில் 3,714 மலேசியர்கள் மற்றும் 335 வெளிநாட்டினர் மற்றும் 34 இறக்குமதி செய்யப்பட்ட தொற்றுகள் அடங்கும். இதில், நோயறிதலின் போது 1.7% நோயாளிகள் மட்டுமே வகை 3, 4 அல்லது 5 இல் இருந்தனர். நூர் ஹிஷாம் இன்று மூன்று புதிய கொத்துகள் பதிவாகியுள்ளதாக கூறினார்.

















