வெள்ளத்தில் மூழ்கிய வாகனங்களை வெ.100க்கும் குறைவான தொகையில் பழுது பார்க்கும் பணியில் IKMTSYA மாணவர்கள்

குவாந்தான், டிசம்பர் 21 :

இன்று இங்குள்ள தாமான் ஸ்ரீ இந்தரபுராவில் , கூட்டு சமூகப் பொறுப்பின் (CSR) அடிப்படையில் வெள்ளத்தால் சேதமடைந்த வாகனங்களை பெக்கானில் உள்ள மாரா டான்ஸ்ரீ யஹாயா அஹ்மட் ஸ்கில்ஸ் இன்ஸ்டிடியூட் (IKMTSYA) இன் 24 பேர் கொண்ட மாணவர்கள் குழு பழுதுபார்க்கும் பணியை மேற்கொண்டது.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஜெய்லானி சுமதி கூறுகையில், ஆட்டோமோத்திவ் டெக்னாலஜி டிப்ளோமா கற்கைநெறியின் இரண்டாம் ஆண்டு மாணவர்களை உள்ளடக்கிய இந்த நிகழ்ச்சி, முதன்முறையாக இங்கு நடத்தப்பட்டது என்றும் இந்த முயற்சிக்கு அத்துறையில் விரிவான அனுபவமுள்ள பல விரிவுரையாளர்களும் மாணவர்களுக்கு உதவினார்கள் என்றார் .

“நாங்கள் தாமான் குருவுக்குச் செல்வதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ஒரு நாளைக்கு மொத்தம் 20 வாகனங்கள் பழுதுபார்க்க இலக்கு வைத்து இதனை மேற்கொண்டோம், மேலும் பல வாகனங்கள் பாதிக்கப்பட்டிருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை, மேலும் இந்த வெள்ளத்தால் பல வாகன உரிமையாளர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

“ஒவ்வொரு காரின் இன்ஜின் எண்ணெய்யையும் மாற்றுவோம், மற்ற சேதங்களை ரிம100க்கும் குறைவான செலவில் சரிசெய்வோம்” என்று அவர் கூறினார்.

அவர் கூறுகையில், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, மாவட்டம் பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதையடுத்து, திரெங்கானுவில் உள்ள கெமாமன் என்ற இடத்தில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது என்று அவர் மேலும் கூறினார்.

– ஹரியான் மெட்ரோ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here