ஜாலான் அம்பாங்கில் ஆடவர் ஒருவரை கொலை செய்த வழக்கில் மூவர் கைது!

கோலாலம்பூர், டிசம்பர் 31 :

கடந்த செவ்வாய்கிழமை இங்குள்ள ஜாலான் அம்பாங்கில் ஒரு நபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக நம்பப்படும் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கோலாலம்பூர் குற்றப் புலனாய்வுத் துறைத் தலைவர் எஸ்ஏசி சைபுல் அன்னுார் யூசோஃப் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்களில் 28 மற்றும் 32 வயதுடைய இருவர் புதன்கிழமை மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் இங்கு ஒரு இடத்தில் கைது செய்யப்பட்டதாகவும், நேற்று மற்றொரு இடத்தில் முக்கிய சந்தேக நபரான 33 வயதுடைய ஒருவரை கைது செய்ததாகவும் தெரிவித்தார்.

புதன்கிழமை கைது செய்யப்பட்ட இருவரும் ஏழு நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

செவ்வாய்கிழமை மாலை 6 மணியளவில் மூன்று பேர் மற்றொரு நபரைத் தாக்குவதைக் கண்டதாக சம்பவ இடத்தின் சாட்சிகள் போலீசாருக்குத் தெரிவித்ததை தொடர்ந்தே இந்த கைதுகள் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here