கடந்த 2021ஆம் ஆண்டில் உலக மக்கள்தொகையில் 7.4 கோடி அதிகரித்துள்ளதாக அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், 2022ஆம் ஆண்டு புத்தாண்டு தினத்தின்போது உலக மக்கள்தொகை 780 கோடியாக இருக்கும்.
இது, 2012ஆம் ஆண்டு புத்தாண்டு தினத்தைவிட 0.9 சதவீதம் அதிகமாகும். அதன்படி, கடந்த ஓராண்டில் மட்டும் உலக மக்கள்தொகையில் 7.4 கோடி அதிகரித்துள்ளது.
இந்தப் புத்தாண்டு தினத்திலிருந்து உலகம் முழுவதும் ஒவ்வொரு 10 விநாடிக்கு 43 குழந்தைகள் பிறக்கும்; 20 போ் இறப்பாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டில் மட்டும் அமெரிக்காவில் சுமாா் 7.07 லட்சம் போ் அதிகரித்து, 2022ஆம் ஆண்டு புத்தாண்டு தினத்தன்று நாட்டின் மக்கள் தொகை 33.24 கோடியாக இருக்கும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.