ஜோகூர், மலாக்காவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு

கோலாலம்பூர், ஜனவரி 4 :

ஜோகூர் மற்றும் மலாக்காவில் இன்று காலை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததுள்ளது, அதே நேரத்தில் திரெங்கானு, பகாங், நெகிரி செம்பிலான், சிலாங்கூர் மற்றும் சபாவில் நிலைமை நேற்றோடு ஒப்பிடும்போது பெரிய அளவில் எந்த மாற்றமுமில்லை.

இன்று காலை 7 மணி நிலவரப்படி, பகாங் (3) , ஜோகூர் (3), நெகிரி செம்பிலான் (1) மற்றும் மலாக்கா (2) ஆகிய ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் இம் மாநிலங்களில் உள்ள 9 ஆறுகளில் ஆபத்தான நீர் மட்டம் பதிவாகியுள்ளதாக நீர்பாசன மற்றும் வடிகால் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஜோகூரில், நேற்று தற்காலிக வெள்ள நிவாரண மையத்தில் தஞ்சமடைந்தவர்கள் 4,737 பேருடன் ஒப்பிடும்போது, ​​ஏழு மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று காலை 5,479 ஆக அதிகரித்துள்ளது.

இதில் செகாமாட் 4,016 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களைப் பதிவுசெய்துள்ளது, அதைத் தொடர்ந்து மெர்சிங் (548), டாங்காக் (434), கோத்தா திங்கி (210), பத்து பஹாட் (107), குளுவாங் (106) மற்றும் மூவார் (58) ஆகியோர் வெள்ள நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

மாநில சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் குழுத் தலைவர் ஆர். வித்யானந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்றிரவு மற்றும் இன்று அதிகாலையில் மெர்சிங், பத்து பஹாட், மூவார் மற்றும் டாங்காக் ஆகிய இடங்களில் ஐந்து புதிய நிவாரண மையங்கள் (பிபிஎஸ்) திறக்கப்பட்டன என்றும் தற்போது 78 தற்காலிக வெள்ள நிவாரண மையங்கள் செயல்பாட்டிலுள்ளன என்றார்.

மலாக்காவில், நேற்று தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் தங்கியிருந்த 2,591 பேரிலிருந்து, இன்று காலை 8 மணியளவில் 2,674 பேராக உயர்ந்துள்ளது.

மொத்தம் 994 பேர் அலோர் காஜாவில் உள்ள 9 பிபிஎஸ்ஸிலும், 1,425 பேர் மலாக்கா தெங்காவில் உள்ள 9 பிபிஎஸ்ஸிலும், 255 பேர் ஜாசினில் உள்ள 4 பிபிஎஸ்ஸிலும் வைக்கப்பட்டுள்ளனர்.

மாநில குடிமைத் தற்காப்புப் படையின் இயக்குநர் லெப்டினன்ட் கர்னல் (PA) Cutbert John Martin Quadra அவர்கள் இதுபற்றிக் கூறும்போது, வெள்ள நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டிருப்பவர்கள் அலோர் கஜாவின் 14 பகுதிகளையும், மலாக்கா தெங்காவில் 9 பகுதிகளையும், ஜாசினில் 11 பகுதிகளையும் சேர்ந்தவர்கள் என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here