சிலாங்கூரில் வெள்ள நிவாரணத்திற்காக பெட்ரோனாஸ் RM1.1 மில்லியனை வழங்குகிறது

ஷா ஆலம், ஜனவரி 6 :

சிலாங்கூர் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக பெட்ரோனாஸ், இன்று 1,000 யூனிட் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் RM1 மில்லியன் மதிப்புள்ள துப்புரவு உபகரணங்கள் போன்றவற்றை சிலாங்கூர் மாநில அரசிடம் ஒப்படைத்தது.

வெள்ள நிவாரணப் பணிகளுக்காக பெட்ரோனாஸ் RM25 மில்லியன் வழங்குவதாக உறுதியளித்ததுடன் அதன் முதல் கட்டமாக இந்த பொருட்களை, சிலாங்கூர் ஷா ஆலமில் உள்ள சுல்தான் சலாவுடின் அப்துல் அஜிஸ் ஷா கட்டிடத்தில் சிலாங்கூர் மாநில அரசாங்கத்திடம் ஒப்படைத்தது.

இந்த ஒப்படைப்பில் பெட்ரோனாஸ் துணைத் தலைவர் சந்தைப்படுத்தல், கீழ்நிலை வணிகம், அஹமட் அட்லி அலியாஸ் மற்றும் சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி ஆகியோர் கலந்துகொண்டனர்.

“எங்கள் உதவியை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். மாநில அரசாங்கத்துடன் ஒத்துழைப்பது, பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு நமது பங்களிப்பை மிகவும் திறம்பட விநியோகிக்கவும் மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுத்தம் செய்யும் சேவைகளை எளிதாக்கவும் – அதாவது கிள்ளான்,பெட்டாலிங் , கோல லங்காட், உலு லங்காட் மற்றும்செப்பாங் ஆகிய இடங்களில் – இது KDEB கழிவுகள்மேலாண்மை நிவாரகத்தினருக்கு உதவியாகவும் இருக்கும் ,” என்று அஹமட் அட்லி கூறினார்.

மேலும் உறுதியளிக்கப்பட்ட பெட்ரோனாஸின் மொத்த பங்களிப்பும், நாட்டின் பல பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here