கோலாலம்பூர், ஸ்தாப்பாக் டானாவ் கோத்தா அடுக்குமாடி குடியிருப்பின் A பிளாக் அருகே ஒரு பெண் குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. வங்சா மாஜு மாவட்ட காவல்துறைத் தலைவர் அஷாரி அபு சாமா கூறுகையில், காலை 8.21 மணியளவில் ஒரு பலகையில் சடலம் கண்டெடுக்கப்பட்டது குறித்த புகார் தங்களுக்கு கிடைத்தது.
முதற்கட்ட விசாரணையில் அது ஒரு நாளைக்கு முன் பிறந்த பெண் குழந்தையின் சடலம் என்று கண்டறியப்பட்டது. உடல் பிரேத பரிசோதனைக்காக கோலாலம்பூர் மருத்துவமனை தடயவியல் பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இந்த வழக்கு தொடர்பான தகவல்களை பொதுமக்கள் மாவட்ட தலைமையகத்தில் தெரிவிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார். உடலை ரகசியமாக அப்புறப்படுத்தி குழந்தை பிறப்பை மறைத்ததாக குற்றவியல் சட்டம் 318ஆவது பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.