கோழி இறைச்சி, முட்டை விலை உயர்வை தடுக்க அரசு தலையீடு தேவை – நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர்

புத்ராஜெயா, ஜனவரி 8 :

அரசின் தலையீடு இல்லாவிட்டால் கோழி இறைச்சி மற்றும் முட்டை விலை இன்னும் உயரும் என உள்நாட்டு வர்த்தகம் மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் அலெக்சாண்டர் நந்தா லிங்கி தெரிவித்துள்ளார்.

எனவே, சந்தையில் கோழி இறைச்சி மற்றும் முட்டை விலை உயர்வை சமப்படுத்த உள்நாட்டு வர்த்தகம் மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சகம் (KPDNHEP) உள்ளிட்டவை தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்றும் அவர் கூறினார்.

ஏற்கனவே எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில், மலேசிய குடும்ப அதிகபட்ச விலைத் திட்டம் (SHMKM) பிப்ரவரி 4 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் உறைந்த கோழி இறைச்சி இறக்குமதி மற்றும் சந்தையில் கோழி இறைச்சியின் விலை திடீர் உயர்வை சமாளிக்க கோழி வளர்ப்பவர்களுக்கு மென்மையான கடன் வசதியை வழங்குதல் ஆகியவை அடங்கும்.

டிசம்பர் 31, 2021 இல் முடிவடையத் திட்டமிடப்பட்டிருந்த SHMKM இன் நடைமுறைப்படுத்தல் ஜனவரி 1 முதல் பிப்ரவரி 4, 2022 வரை மேலும் 35 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் கோழி இறைச்சியின் உச்சவரம்பு விலை கிலோவுக்கு RM6.10 பண்ணை விலையாக உள்ளது, அதே நேரம் ஒரு கிலோ மொத்த விற்பனை விலை RM7.80 ஆகவும் சில்லறை விற்பனை விலை ஒரு கிலோ RM9.10 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார்.

இது தவிர, விவசாயம் மற்றும் உணவுத் தொழில் அமைச்சகம் (MAFI) ஒரு மாதத்திற்கு 10,000 மெட்ரிக் டன் உறைந்த கோழி இறைச்சிகளை அல்லது 5.5 மில்லியன் கிலோ இறைச்சிகளை இறக்குமதி செய்கிறது என்று கோழி மற்றும் முட்டை விலை உயர்வு குறித்து அவர் இன்று தனது முகநூலில் ஒரு பதிவு மூலம் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here