ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள் ஓட்டி, சாகசங்களைச் செய்த மூவர் கைது

கோலாலம்பூர்:

கோலாலம்பூர்-சிரம்பான் விரைவுச்சாலையைச் சுற்றி மோட்டார் சைக்கிள்களை ஆபத்தான முறையில் ஓட்டி, சாகசங்களைச் செய்த மூன்றுமோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் இன்று அதிகாலை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

புக்கிட் அமான் JSPT உளவுத்துறை/செயல்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் அடங்கிய குழு, நள்ளிரவு 12 மணி முதல் இன்று காலை 4 மணி வரை தெருக் குண்டர்களுக்கு எதிரான நடவடிக்கையை நடத்தியது என்று, போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறையின் (JSPT) இயக்குநர் டத்தோ முகமட் அஸ்மான் அஹ்மட் சப்ரி கூறினார்.

“இந்த நடவடிக்கையில், இரண்டு வெவ்வேறு இடங்களில் பொறுப்பற்ற மற்றும் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள் ஓட்டியது மற்றும் இரண்டு கால்களையும் பின்னோக்கி நிமிர்ந்தி சூப்பர்மேன் போன்ற ஸ்ராட்ண்ட் செய்த குற்றத்திற்காக 21 முதல் 24 வயதுடைய மூன்று ஆண்களும் கைது செய்யப்பட்டனர்” என்றார்.

குறித்த மூவரும் சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987ன் பிரிவு 42 மற்றும் சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987 பிரிவு 60ன் கீழ் குற்றங்களுக்காக மொத்தம் மூன்று பேர் கைது செய்யப்பட்டதாகவும், ஏழு மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.

மேலும், இக்கைது தவிர இந்த நடவடிக்கையில் பல்வேறு குற்றங்களுக்காக 30 சம்மன்கள் அனுப்பப்பட்டன.

“கைது செய்யப்பட்ட அவர்கள் அனைவரும் செந்தூல், ஷா ஆலாம் மற்றும் சுபாங் ஜெயாவிலிருந்து அருகிலுள்ள பகுதியைச் சுற்றி வாழ்கிறார்கள் என்றும், மேலும் அவர்கள் தங்கள் ஓய்வு நேரத்தை ஒன்றுகூடுவதற்கும் செலவிடுவதற்கும் மற்றும் சாகசம் செய்வதற்கும் நெடுஞ்சாலையை பயன்படுத்துகிறார்கள்,” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here