கால்பந்து போட்டிக்குப் பிறகு கலவரத்தில் ஈடுபட்டதற்காக பினாங்கு மைதானத்திற்கு வெளியே ஏழு பேர் கைது

ஜார்ஜ் டவுன்: செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 22) பினாங்கை 2-1 என்ற கோல் கணக்கில் கெடா தோற்கடித்ததை அடுத்து, சிட்டி ஸ்டேடியத்திற்கு வெளியே பினாங்கு மற்றும் கெடா கால்பந்து அணிகளின் ஆதரவாளர்களுக்கு இடையே ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து ஏழு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஜார்ஜ் டவுன் காவல்துறை தலைவர்  சோஃபியான் சண்டோங், செவ்வாய் கிழமை இரவு 11.20 மணியளவில் நடந்த சம்பவத்தின் போது பொருட்களுக்கு சேதம் விளைவித்ததோடு  பேருந்தின் கண்ணாடி கதவு உடைக்கப்பட்டது. சந்தேக நபர்களில் இருவருக்கு தலையில் காயங்கள் ஏற்பட்டதாக கூறினார்.

ஒரு பெட்ரோல் நிலையத்தில் நடந்த கலவரத்தில் இரண்டு உள்ளூர் கால்பந்து கிளப்புகளின் ஆதரவாளர்கள் என்று நம்பப்படும் இரண்டு ஆடவர் குழுக்கள் ஈடுபட்டன. பினாங்குக்கும் கெடாவுக்கும் இடையிலான மலேசியா சூப்பர் லீக் (எம்எஸ்எல்) போட்டியைப் பார்த்த பிறகு மைதானத்திற்கு வெளியே இரு குழுக்களிடையே ஆத்திரமூட்டலுடன் தொடங்கியது.

பினாங்கு, கெடா மற்றும் சரவாக் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 18 முதல் 38 வயதுடைய ஏழு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவத்தின் போது சந்தேக நபர்கள் பயன்படுத்தியதாக நம்பப்படும் இரண்டு கற்கள், இரண்டு போக்குவரத்து கூம்புகள் மற்றும் ஒரு கட்டையையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

கெடா அணி ஆதரவாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்தின் கண்ணாடிக் கதவு ஒரு சந்தேக நபரால் உடைக்கப்பட்டது. மேலும் இரு சந்தேக நபர்கள் வீசப்பட்ட கற்களால் தாக்கப்பட்டதாக நம்பப்பட்டதால் தலையில் காயம் ஏற்பட்டது என்று அவர் இன்று புதன்கிழமை (ஆகஸ்ட் 23) ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

கலவரம் மற்றும் காழ்ப்புணர்ச்சிக்காக குற்றவியல் சட்டத்தின் பிரிவு 148 மற்றும் பிரிவு 427 இன் கீழ் வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது. மேலும் அனைத்து சந்தேக நபர்களும் விசாரணையை எளிதாக்குவதற்காக இரண்டு நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here