பெட்டாலிங் ஜெயா, ஜனவரி 12 :
திருமணமான பெண்ணை அவரது வீட்டில் வைத்து, பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட நீதிபதியிடம் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
செய்தித் தகவல்களின்படி, நீதிபதி தனது படுக்கையில் நிர்வாணமாக கிடப்பதைக் கண்டதாகக் கூறி, பெண் ஒருவர் புகார் அளித்ததை அடுத்து, அம்பாங் ஜெயா மாவட்ட காவல்துறை இந்த வழக்கை விசாரித்து வருகிறது.
ஆகஸ்ட் 2020 இல், அந்தப் பெண்ணின் கணவர் படுத்த படுக்கையாக இருக்கும் நிலையில், அந்த பெண்ணின் வீட்டிற்கு நீதிபதி சென்றபோது, இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது.
“நாங்கள் விசாரணையை மேற்கொண்டுள்ளோம் ” என்று அம்பாங் ஜெயா மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி முகமட் ஃபாரூக் எஷாக் கூறினார்.
பெண்ணின் புகாரில், அவரது வீட்டிற்கு வந்த நீதிபதி, அந்த பெண்ணிடம் தனது படுக்கையறையில் பூஜை செய்ய அனுமதி கேட்டதாகவும், சிறிது நேரமாகியும் அவர் வெளியே வராததால், அந்த பெண் உள்ளே சென்று பார்த்தபோது, அவர் ஆடையின்றி படுக்கையில் படுத்திருப்பதை கண்டதாகவும் கூறப்படுகிறது.