5 மாதங்கள் சிறையின் பின் விடுதலையான மூன்று முன்னாள் குற்றவாளிகள் மீண்டும் கைது!

கோலாலம்பூர், ஜனவரி 13:

பெட்டாலிங் ஜெயா, செர்டாங் மற்றும் அம்பாங்கைச் சுற்றியுள்ள பகுதிகளில் வீடு, கடை உடைப்புகள் மற்றும் திருட்டுகளில் ஈடுபட்டதாக நம்பப்படும், 5 மாதங்கள் சிறையின் பின் விடுதலையான மூன்று முன்னாள் குற்றவாளிகள் மீண்டும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

பெட்டாலிங் ஜெயா காவல்துறைத் தலைவர் முகமட் ஃபக்ருடின் அப்துல் ஹமிட் கூறுகையில், உளவுத்துறை மற்றும் பொதுத் தகவல்களின் விளைவாக ஜனவரி 4 ஆம் தேதி புடு மற்றும் ஸ்தாப்பாக்கில் 39 முதல் 59 வயதுடைய மூன்று ஆண்களும் கைது செய்யப்பட்டனர் என்றார்.

மேலும், சந்தேக நபர்கள் ஆளில்லாத வீடுகளை குறிவைத்து திருடியதாகவும், அவர்கள் வழக்கமாக காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வீட்டில் உள்ளவர்கள் வேலைக்குச் சென்ற பின்னர் வீடுகளை உடைத்து திருடுவதாக ஆரம்ப விசாரணைகளில் கண்டறியப்பட்டது என்றும் முகமட் ஃபக்ருடின் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here