சிகாமாட்டில் வெள்ள நிவாரண மையத்தில் தங்கியுள்ளோர் எண்ணிக்கை 37 பேராகக் குறைந்துள்ளது

ஜோகூர் பாரு, ஜனவரி 17 :

இன்று மாலை 4 மணி நிலவரப்படி, சிகாமாட்டில் உள்ள வெள்ள நிவாரண மையத்தில் தங்கியுள்ளவர்களின் எண்ணிக்கை 37 பேராகக் குறைந்துள்ளது. இந்த எண்ணிக்கை இன்று காலை 74 பேராக இருந்தது.

மாநில சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் குழு தலைவர், ஆர். வித்யானந்தன் இதுபற்றிக் கூறுகையில், வெள்ள நீர் இன்னமும் அவர்கள் வீடுகளில் தேங்கியுள்ளதால், எட்டு குடும்பங்களைச் சேர்ந்த 37 பேர் செக்கோலா அகமா கெமெரேயில் அமைந்துள்ள ஒரே ஒரு வெள்ள நிவாரண மையத்தில் தங்கியுள்ளனர் என்றார்.

“ஜோகூரின் அனைத்து மாவட்டங்களிலும் தற்போது வானிலை நன்றாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,” என்று அவர் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

கடந்த சனிக்கிழமை, சிகாமாட் மாவட்ட அதிகாரி ஹஸ்ரின் கமால் ஹாஷிம், வெள்ள நிலைமை 98 விழுக்காடு இயல்பு நிலைக்குத் திரும்பியவுடன் அனைத்து வெள்ள நிவாரண மையங்களையும் மூடுவதற்கு முன் மாவட்ட வெள்ளக் கட்டுப்பாட்டு செயல்பாட்டு மையம் மதிப்பீடு செய்யும் என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here