கமல் ஹாசன் முதல் தனுஷ் வரை… அதிர்ச்சியில் ஆழ்த்திய விவாகரத்து மற்றும் உறவு முறிவு கதைகள்!

                                                           1/ 12

கமல்ஹாசன் வெவ்வேறு காலகட்டங்களில் பல உறவுகளில் இருந்தபோதும், நாம் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், அவரது பார்ட்னர்கள் யாரும் அவர் மீது சாட்டவில்லை. நல்ல நிலையில் சுமூகமாகவே பிரிந்துள்ளனர். கமல்ஹாசன் மற்றும் கௌதமியை பல்வேறு சந்தர்ப்பங்களில் ஒன்றாகப் பார்த்து மகிழ்ச்சியுடன் இருந்தபோது, அவர்களது திடீர் முறிவு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

                                                          2/ 12

பிரபுதேவா தனது மனைவியை பிரிந்த கதை மிகப்பெரிய செய்திகளில் ஒன்றாகும். நயன்தாராவுடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததால், அவரது திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது. நயன்தாரா குத்திக் கொண்ட ‘பிரபு’ டாட்டூவையும், பின்னர் விக்னேஷ் சிவனை காதலிக்க தொடங்கிய பிறகு, அதில் அவர் செய்த மாற்றங்களையும் யார் மறந்திருப்பார்கள்?

                                                            3/ 12

இசை வாழ்க்கையில் அடைந்த வெற்றியை மீறி, யுவன் ஷங்கர் ராஜாவின் தனிப்பட்ட வாழ்க்கை இரண்டு தோல்வியுற்ற திருமணங்களுடன் ரோலர் கோஸ்டர் ரைடாக இருந்தது. 2005-ல் சுஜயா சந்திரனை மணந்தார் யுவன், ஆனால் அந்தத் திருமணம் மூன்று மாதங்களில் விவாகரத்தில் முடிந்தது. பின்னர் 2008-ல், அவர் ஷில்பா மோகனை மணந்தார், ஆனால் அவர்களும் பிரிந்தனர். இதையடுத்து 2014-ஆம் ஆண்டு, இஸ்லாம் மதத்திற்கு மாறிய யுவன், ஜனவரி 1, 2015 அன்று கீழக்கரையை சேர்ந்த ஜஃப்ருன்னிசாவை திருமணம் செய்துக் கொண்டார். இப்போது அவர்கள் தங்கள் மகளுடன் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.

                                                           4/ 12

ராதிகா சரத்குமாரின் காதல் வாழ்க்கை தமிழ் சினிமா மறக்க முடியாத மற்றொரு தலைப்பு. அவர் 1985-ல் நடிகர் பிரதாப் போத்தனுடன் உறவில் இருந்தார். இந்த குறுகிய கால உறவு விரைவில் முடிவுக்கு வந்தது, பின்னர் 1990-ல், அவர் தனது முதல் குழந்தையான ராயனேவின் தந்தையான ரிச்சர்ட் ஹார்டி என்ற பிரிட்டிஷ் நபரை மணந்தார். ஆனால் அந்த திருமணம் 1992-ல் முடிவுக்கு வந்தது. இதையடுத்து பல வருடங்கள் தனி பெண்ணாக இருந்ததைத் தொடர்ந்து, 2001-ல், சரத்குமாரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார்.

                                                             5/ 12

பார்த்திபன் மற்றும் சீதா 1990-ல் திருமணம் செய்து கொண்டனர், இந்த தம்பதியருக்கு வளர்ப்பு மகன் உட்பட மூன்று குழந்தைகள் உள்ளனர். அவர்கள் 2001-ல் விவாகரத்து பெற்று தங்கள் திருமணத்தை முடித்துக்கொண்டனர்.

                                                              6/ 12

கன்ணியமான தம்பதிகள் பிரிந்த பிறகும் எப்படி நட்பாக இருக்க வேண்டும் என்பதற்கு ரோகினியும், ரகுவரனும் உதாரணம். இவர்களது திருமணம் 1996-ல் நடந்தது, 2004-ம் ஆண்டு பிரிந்தனர். ஆனால் விவாகரத்துக்குப் பிறகும், ரகுவரன் மறையும் வரை இருவரும் நண்பர்களாகவே இருந்தனர் என்பது அனைவரும் அறிந்ததே. ரோகினி, இன்றும் தனது கணவரைப் பற்றி அவ்வப்போது நேர்மறையாக ட்வீட் செய்கிறார்.

                                                               7/ 12

நடிகை ரேவதியும், சுரேஷ் சந்திர மேனனும் காதலித்து 1988-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். சுமார் 15 வருட திருமணத்திற்குப் பிறகு, 2012-ல் அவர்களது உறவில் ஒரு கடினமான பிரச்சனை ஏற்பட்டது. பின்னர் அவர்கள் அதே ஆண்டில் பிரிந்து 2013-ல் அதிகாரப்பூர்வமாக விவாகரத்து பெற்றனர்.

                                                              8/ 12

இயக்குனர் செல்வராகவன் மற்றும் சோனியா அகர்வால் தங்களின் பிளாக்பஸ்டர் திரைப்படமான 7/G ரெயின்போ காலனி படப்பிடிப்பின் போது காதலில் விழுந்தனர். 2006-ல் திருமணம் செய்துக் கொண்ட அவர்கள், 2010-ல் அதிகாரப்பூர்வ விவாகரத்துடன் தங்கள் திருமணத்தை முடித்தனர்.

                                                             9/ 12

விஷ்ணுவும், ரஜினியும் 2011-ல் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு உறுதியான காதலில் இருந்தனர். இறுதியாக, இந்த ஜோடிக்கு விஷயங்கள் சரியாக நடக்காததால், 2018-ஆம் ஆண்டில் தங்கள் உறவை முறித்துக் கொண்டனர்.

                                                          10/ 12

பல வருடங்களாக காதலித்து வந்த இயக்குனர் ஏ.எல்.விஜய் மற்றும் அமலா பால் இருவரும் கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.இருப்பினும் கருத்து வேறுபாடு காரணமாக 2016ல் பிரிந்து, 2017-ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.

                                                              11/ 12

2017-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துக் கொண்ட சமந்தாவும், நாக சைத்தன்யாவும் கடந்த அக்டோபரில் பிரிவதாக அறிவித்தனர். இது தமிழ் – தெலுங்கு ரசிகர்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தது.

                                                                12/ 12

காதலித்து திருமணம் செய்துக் கொண்ட தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் தங்களின் 18 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வருவதாக தற்போது அறிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here