கோலாலம்பூர், ஜனவரி 20 :
நாடு முழுவதும் மொத்தம் 122,202 போலீஸ்காரர்கள் முழுமையாக கோவிட்-19 தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர் என்று போலீஸ்படைத் தலைவர் (IGP) டான்ஸ்ரீ அக்ரில் சானி அப்துல்லா சானி தெரிவித்தார்.
கடந்த ஜனவரி 18 ஆம் தேதி வரை, 32,652 பேர் பூஸ்டர் தடுப்பூசியையும் செலுத்திக்கொண்டுவிட்டனர்.
“இது மலேசிய போலீசாரை கோவிட்-19 நோய்த்தொற்றின் சங்கிலியை உடைக்க உதவுவது உட்பட, அவர்களின் கடமைகளைச் செய்யும் போது, கோவிட்-19 தொற்று ஏற்படும் அபாயத்திலிருந்து பாதுகாக்கும் என்று நம்புகிறோம்,” என்று அவர் கூறினார்.
தேசிய கோவிட்-19 நோய்த்தடுப்பு திட்டத்தின் மூலம் போலீஸ் பணியாளர்கள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதில் தொடர்ச்சியான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று, புக்கிட் அமானில் உள்ள ஐஜிபியின் மாதாந்திர பேரவையுடன் இணைந்து போலீஸின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் அவர் தனது செய்தியில் இவ்வாறு கூறினார்.
இதற்கிடையில், போலீஸ் பணியாளர்களின் நேர்மையை வலுப்படுத்துதல், சமூகத்திற்கு சேவை செய்தல் மற்றும் நாட்டில் ஒழுங்கைப் பேணுதல் ஆகிய மூன்று விஷயங்களில் முக்கியக் கவனத்தை இந்த 2022 ஆம் ஆண்டில் போலீசார் முன்னெடுப்பார்கள் எந்றம் அக்ரில் சானி கூறினார்.