119,626 குடும்பத் தலைவர்கள் அரசாங்கத்தின் வெள்ள நிவாரண நிதி உதவியைப் பெறத் தகுதி பெற்றுள்ளனர் – நட்மா தகவல்

கோலாலம்பூர், ஜனவரி 23 :

தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனத்தின் (NADMA) தரவுகளின்படி, இன்று காலை 8 மணி நிலவரப்படி மொத்தம் 119,626 குடும்பத் தலைவர்கள் அரசாங்கத்தின் வெள்ள நிவாரண நிதி (இரக்க) உதவியை (Bantuan Wang Ihsan) பெறத் தகுதி பெற்றுள்ளனர்.

நட்மா இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில், மொத்தத்தில், 105,974 வீடுகள் வெள்ளத்தின் முதல் அலையின் போது பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ளவை இரண்டாவது அலையின் போது பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் அலை வெள்ளத்தின் போது தற்காலிக நிவாரண மையங்களில் (பிபிஎஸ்) பதிவு செய்த 31,380 குடும்பத் தலைவர்களில் மொத்தம் 30,503 (97.8 விழுக்காட்டினர்) அரசாங்கத்தின் BWI உதவியைப் பெற்றுள்ளனர்.

“இரண்டாம் அலை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 13,652 பேரில், மொத்தம் 3,750 (61.8 விழுக்காட்டினர்) BWI உதவிகளைப் பெற்றுள்ளனர்” என்று அந்த அறிக்கை கூறுகிறது.

இதற்கிடையில், PPS இல் தங்க வைக்கப்படாத 82,381 குடும்பத் தலைவர்களில் 43,197 பேர் இந்த BWI உதவித் தொகையைப் பெற்றுள்ளனர்.

சபா, சிலாங்கூர், பினாங்கு மற்றும் ஜோகூர் ஆகிய இடங்களில் இன்னும் நான்கு தற்காலிக துயர் துடைப்பு மையங்கள் இயங்கி வருவதாகவும், அவை வெள்ளம், நிலச்சரிவு, குப்பைக்கிடங்கில் தீ உள்ளிட்ட பல சம்பவங்களைத் தொடர்ந்து, வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களை தங்க வைப்பதற்காக திறக்கப்பட்டதாகவும் நட்மா தெரிவித்துள்ளது.

சமூகம் எப்போதும் விழிப்புடன் இருக்கவும், அதிகாரிகளின் அறிவுறுத்தல்களுக்குக் கீழ்ப்படியவும், அறிவுறுத்தப்பட்டால் உடனடியாக வெளியேறவும் தயாராக இருக்குமாறும் நட்மா நினைவூட்டுகிறது என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here