கெடாவிலுள்ள மெட்ரிக்குலேஷன் கல்லூரியில் கோவிட் -19 திரள் (cluster) அடையாளம் காணப்பட்டது

கோப்புப்படம்

அலோர் ஸ்டார், ஜனவரி 29 :

இன்று கெடா, சாங்களுனின் (Changlun) பெர்சியரான் காயூ மானிஸில் உள்ள மெட்ரிக்குலேஷன் கல்லூரியில் 32 கோவிட் -19 தொற்றுக்கள் பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து, ​​மற்றொரு கோவிட் -19 திரள் (cluster) அடையாளம் காணப்பட்டுள்ளது என்று கெடா மாநில சுகாதார இயக்குநர் டாக்டர் ஓத்மான் வாரிஜோ தெரிவித்தார்.

இந்த கோவிட் -19 திரள் டாஹ் காயூ மானிஸ் கிளஸ்டராக (the Dah Kayu Manis Cluster) அறிவிக்கப்பட்டது மற்றும் கோவிட் -19க்கு நேர்மறையான மாணவர்கள் தற்போது வளாகத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

“மேலும் நெருங்கிய தொடர்பில் உள்ளவர்கள் அல்லது அறிகுறிகளைக் கொண்ட மாணவர்கள் வீடு திரும்ப அனுமதிக்கப்பட மாட்டார்கள், அத்தோடு இந்த சீன புத்தாண்டு விடுமுறையின் போது அவர்கள் குறித்த வளாகத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

“எதிர்மறையான மாணவர்கள் மட்டுமே தங்கள் வீடுகளுக்குத் திரும்ப அனுமதிக்கப்படுகிறார்கள்,” என்று அவர் இன்று இங்கு தொடர்பு கொண்டபோது கூறினார்.

இன்றுவரை, கெடாவில் 18 கல்வி நிறுவனங்களில் கோவிட் -19 திரள்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here