கோவிட் தொற்றினால் 7 பேர் நேற்று உயிரிழந்தனர்

சுகாதார அமைச்சினால் நேற்று ஏழு புதிய கோவிட்-19 இறப்புகள்ப திவாகியுள்ளன. அதில் ஒருவர் சேர்க்கப்பட்டபவர் என்று வகைப்படுத்தனர். இறப்பு எண்ணிக்கை இப்போது 31,985 ஆக உள்ளது.

சிலாங்கூர் மற்றும் ஜோகூரில் தலா இரண்டு இறப்புகளும் பகாங், பேராக் மற்றும் தெரெங்கானுவில் தலா ஒரு இறப்பும் பதிவாகியுள்ளன.

நள்ளிரவில் 57,152 செயலில் உள்ள தொற்றுகள் பதிவாகியுள்ளன. 3,041 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 113 பேர் தீவிர சிகிச்சை பிரிவுகளில் (ICU) உள்ளனர். அவர்களில் 59 பேருக்கு சுவாச உதவி தேவைப்படுகிறது.

மேலும் 3,187 பேர் குணமடைந்துள்ளனர். மலேசியாவில் பதிவான மொத்த கோவிட்-19 தொற்றுகளின் எண்ணிக்கை 2,876,324 ஆக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here