கோலாலம்பூர், பிப்ரவரி 4 :
வடக்கு மற்றும் தெற்கிலிருந்து கிள்ளான் பள்ளத்தாக்குக்குத் திரும்பும் அனைத்து வாடிக்கையாளர்களும் பயண நேர ஆலோசனையைப் (TTA) பின்பற்றி, பிப்ரவரி 4 மற்றும் 6 ஆம் தேதிக்கு இடைப்பட்ட பயணங்களுக்கு, காலை 9 மணிக்குள் நெடுஞ்சாலைக்குள் நுழையுமாறு பிளஸ் மலேசியா பெர்ஹாட் (PLUS) அறிவுறுத்துகிறது.
சீனப் புத்தாண்டின் இரண்டாவது நாளில் (பிப்ரவரி 2) வடக்கு-தெற்கு விரைவுச்சாலையில் அனைத்து மாநிலங்களிலிருந்தும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்ததைக் தொடர்ந்து, போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு இந்த அறிவுறுத்தல் வழங்கப்படுவதாக இன்று PLUS வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும் பிப். 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் போக்குவரத்து நெரிசல் மீண்டும் நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஏனெனில் பெரும்பாலானோர் வேலை மற்றும் பள்ளி விடுமுறை நாட்களில் கிள்ளான் பள்ளத்தாக்குக்குத் திரும்பிச் செல்ல தங்கள் பயணத்தைத் தொடங்கியுள்ளனர்.
“போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, அனைத்து வாடிக்கையாளர்களும் பயண நேர ஆலோசனையைப் (TTA) பின்பற்றி, தங்கள் பாதுகாப்பான பயணத்தைத் திட்டமிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்று PLUS தலைமை இயக்க அதிகாரி டத்தோ ஜகாரியா அஹமட் ஜாபிடி கேட்டுக்கொண்டார்.
அத்தோடு நெடுஞ்சாலையில் தங்கள் வாகனங்களில் சிக்கல்களை எதிர்கொள்பவர்களுக்கு PLUSRonda குழுக்கள் உதவுவதன் மூலம் நகரத்திற்கு செல்லும் பயணத்தை வசதியான அனுபவிப்பதை உறுதிசெய்ய PLUS முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.