நண்பர்களுடன் மலையேறிய 28 வயது ஆடவர், திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்

பூச்சோங், பிப்ரவரி 4 :

இங்குள்ள புக்கிட் வாவாசன் என்ற இடத்தில், நண்பர்களுடன் பொழுதுபோக்கிற்காக மலை ஏறிய 130 கிலோ எடையுள்ள ஒரு ஆடவர், மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகுந்த அதிர்ச்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (JBPM) இயக்குநர் நோரஸாம் காமிஸ் இதுபற்றிக் கூறுகையில், தங்களுக்கு இன்று காலை 10.49 மணிக்கு அறிக்கை கிடைத்ததாகவும், 9 நிமிடங்களுக்குப் பிறகு தனது துறையினர் அந்த இடத்திற்கு சென்றதாகவும் கூறினார்.

அவரது கூற்றுப்படி, பூச்சோங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து (BBP) மொத்தம் இரண்டு அதிகாரிகள் மற்றும் ஏழு தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்குச் சென்றனர்.

“குவான் வீ சியோங், 28, என்பவர் தனது இரண்டு நண்பர்களுடன் உல்லாசமாக பேசிக்கொண்டு, நடந்து சென்று கொண்டிருந்த போது மயங்கி விழுந்தார்.

“தீயணைப்பு பிரிவினர் பாதிக்கப்பட்டவரை அந்த இடத்த்திலிருந்து கீழே இறக்கும் பணியை மேற்கொண்டனர், மேலும் பிற்பகல் 2.48 மணிக்கு மருத்துவ பிரிவினரால் அந்த நபர் இறந்துவிட்டார் என்று உறுதி செய்யப்பட்டது,” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

மேலும் பாதிக்கப்பட்டவரது உடல் மேலதிக நடவடிக்கைக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here