கோலாலம்பூரின் இரு கேளிக்கை மையங்களில் நிலையான இயக்க நடைமுறைகளை மீறியதற்காக 75 பேருக்கு அபராதம் விதிப்பு

கோலாலம்பூர், பிப்ரவரி 5:

தலைநகரில் உள்ள இரண்டு பொழுதுபோக்கு மையங்களில், குற்றத் தடுப்பு மற்றும் சமூகப் பாதுகாப்புத் துறையினர் நடத்திய சோதனையில் மொத்தம் 75 பார்வையாளர்களுக்கு தேசிய மறுவாழ்வுத் திட்டத்தின் (PPN) 4 ஆம் கட்டத்தின் நிலையான இயக்க நடைமுறைகளை (SOP) மீறியதற்காக அபராதம் விதிக்கப்பட்டது.

குற்றத் தடுப்பு மற்றும் சமூகப் பாதுகாப்புத் துறையின் (JPJKK) கோலாலம்பூர் பிரிவுத் தலைவர் டத்தோ அஸ்மான் அயோப் கூறுகையில், அந்த 75 பேருக்கும் தலா RM1,000 தொகை அபராதத்தை தமது துறை விதித்ததாக கூறினார்.

“தொற்று நோய்கள் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு சட்டம் (APPB) VAT 4 2021 இன் விதிமுறை 17 ஐ மீறிய இரண்டு வளாகங்களுக்கு எதிராகவும் அபராதம் வழங்கப்பட்டது.

“இந்த சோதனையில் வழங்கப்பட்ட மொத்த அபராதத தொகை RM77,000” என்று அவர் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

ஜனவரி 1ஆம் தேதி முதல் நேற்றுவரை, JPJKK கோலாலம்பூர் SOP கோவிட்-19 உடன் இணங்கத் தவறிய நபர்களுக்கு எதிராக மொத்தம் RM238,000 மதிப்புடைய மொத்தம் 238 அபராதங்களை விதித்துள்ளது.

“அனைத்து அபராதங்களும் அரசாங்கத்தால் செயல்படுத்தப்பட்ட சட்டம் 342 APPPB இன் கீழ் வழங்கப்படுகின்றன.

“சமூகத்தின் பொது நலனுக்காக கோவிட் -19 தொற்றுநோய் பரவுவதைக் கட்டுப்படுத்துவதில் அரசாங்கத்திற்கு உதவும் முயற்சிக்கு உறுதுணையாக இதுபோன்ற செயல்பாடுகள் அவ்வப்போது மேலும் மேம்படுத்தப்படும்” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here