செம்பனை எண்ணெய் கொடுப்பனவுகளில் மோசடி: சந்தேக நபருக்கு 7 நாட்கள் தடுப்புக்காவல்!

சிரம்பான், பிப்ரவரி 9 :

கிட்டத்தட்ட RM70,000 மதிப்பிலான செம்பனை எண்ணெய் கொடுப்பனவுகள் உட்பட தனது சொந்த நலனுக்காக, தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்த சந்தேகத்தின் பேரில், ஃபெல்டா நிலத் திட்ட மேற்பார்வையாளர் ஒருவருக்கு எதிராக, இன்று முதல் ஏழு நாட்களுக்கு தடுப்புக்காவல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (SPRM) விண்ணப்பத்தைப் பெற்ற பின்னர், பிப்ரவரி 15 ஆம் தேதி வரை அந்த சந்தேக நபரை காவலில் வைக்கும் உத்தரவை, மாவட்ட நீதிமன்ற நீதிபதி முகமட் பிர்தௌஸ் சலே பிறப்பித்தார்.

இந்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், MACC சட்டம் 2009 இன் பிரிவு 23 இன் படி, 20 ஆண்டுகளுக்கு மிகாமல் சிறைத்தண்டனை மற்றும் லஞ்சத்தின் மதிப்பை விட ஐந்து மடங்கு அபராதம் அல்லது RM10,000 அல்லது அதற்கும் அதிகமான அபராதம் ஆகியவற்றை வழங்க முடியும்.

நேற்று பிற்பகல் 2 மணியளவில் பண்டார் ஸ்ரீ ஜெம்போலில் உள்ள ஃபெல்டா அலுவலகத்தில் 36 வயதான மேற்பார்வையாளர் கைது செய்யப்பட்டார்.

பணம் செலுத்தும் அதிகாரியாக பணிபுரியும் அவர், ஜெலேபுவில் ஃபெல்டா குடியேற்ற வாசிகளுக்கு பணம் செலுத்த வேண்டிய நிலையில், செப்டம்பர் 2020க்கான செம்பனை எண்ணெய் வருவாயான RM69,137.32 தனது சொந்த தேவைக்காக, அவரது பதவியை துஷ்பிரயோகம் செய்ததாக சந்தேகிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here