நேற்று வெடி வைத்து தகர்க்கப்பட்ட தானியங்கி பணப்பட்டுவாடா இயந்திரத்தில் கொள்ளையிடப்பட்ட ரொக்கத்தின் மதிப்பு RM260,000 ஆக அறிவிப்பு

கிள்ளான், பிப்ரவரி 9 :

நேற்று, இங்குள்ள பெக்கான் மேருவில் உள்ள ஒரு பல்பொருள் விற்பனைக் கடையிலுள்ள தானியங்கி பணப்பட்டுவாடா இயந்திரத்தை (ATM) வெடிக்கச் செய்த இரண்டு கைதேர்ந்த தொழில் நுட்பவல்லுனர்களாக குற்றவாளிகளை போலீசார் இன்னும் தேடி வருகின்றனர்.

வடக்கு கிள்ளான் மாவட்ட காவல்துறை தலைமை துணை ஆணையர் எஸ். விஜய ராவ் கூறுகையில், சந்தேகத்திற்குரிய இருவரின் அடையாளங்களை அடையாளம் காண, மேலதிக விசாரணைகள் இன்னும் நடந்து வருகின்றன.

“கண்காணிப்பு கேமராவின் (CCTV) காட்சிகள் மற்றும் காணொளியின் அடிப்படையில், சந்தேக நபர்கள் 30 வயதுடைய இருவர் என்றும் மேலதிக அடையாளங்கள் எதுவும் அடையாளம் காணப்படவில்லை என்றார். ஆனால் சந்தேக நபர்களிடையே நடந்த சில உரையாடல்களின் அடிப்படையில், அவர்கள் உள்ளூர்வாசிகளாக இருக்கலாம்.

“சந்தேக நபர்களான இருவரும் மிக திறமைசாலிகள், உண்மையில் தொழில் வல்லுநர்கள் … ஏனெனில் அவர்கள் பயணம் செய்த காருடன் நேரடியாக இணைக்கப்பட்டிருந்த ஒருவகையான எரிவாயுவை பயன்படுத்தி ATM இயந்திரத்தை உடைக்கவும், லாவகமாக பணத்தை கொள்ளையிடவும் தெரிந்து வைத்துள்ளனர் என்றார்.

ATM இயந்திரத்திலிருந்து கொள்ளையிடப்பட்ட ரொக்கத்தின் மதிப்பு RM260,000 ஆகும், மேலும் சந்தேக நபர் தொடர்பான பிற தகவல்களைக் கண்டறிய போலீசார் இன்னும் விசாரணை நடத்தி வருகின்றனர்” என்று அவர் கூறினார்.

வடக்கு கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் நடந்த மாதாந்திர மாநாடு, காப்பார் போலீஸ் நிலையத்தில் இன்று நடைபெற்ற பின்னர் ஊடகங்களுக்கு அவர் இதனைக் கூறினார்.

முதற்கட்ட விசாரணையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் வெடிகுண்டுகளையோ அல்லது வெடிகுண்டுகளை வைப்பதற்கோ தேவையான எந்த பொருளையும் விட்டுச் செல்லவில்லை என்று கண்டறியப்பட்டதாக விஜய ராவ் கூறினார்.

சந்தேக நபர்கள் இருவரும் குளோன் காரில் (clone car) பயணம் செய்ததும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த வழக்கு குற்றவியல் சட்டம் 457 பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here