சுகாதார அமைச்சகம் கடந்த 24 மணி நேரத்தில் 21,315 கோவிட் -19 தொற்றுகளை பதிவு செய்துள்ளது. இது நேற்று பதிவான 21,072 தொற்றுகளில் இருந்து சற்று அதிகரித்துள்ளது. மொத்த நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை இப்போது 3,061,550 ஆக உள்ளது என்று சுகாதார தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
இன்று பதிவாகியுள்ள 87 அல்லது 0.4% தொற்றுகள் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய 3, 4 மற்றும் 5 வகைகளில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.