மலேசிய மக்கள் தொகையில் 110:100 விகிதத்தில் ஆண்கள் தொகை பெண்களை விட அதிகமாக உள்ளது – பிரதமர்

ஷா ஆலாம், பிப்ரவரி 14 :

மலேசியாவில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில், இளம் வயதுப் பிரிவினரின் எண்ணிக்கை குறைந்துள்ளது, அதே சமயம் முதியோர் பிரிவில் உள்ளவர்கள் பத்து ஆண்டுகளுக்கு முன்பு, 2010 இல் இருந்ததை விட 2020 இல் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளனர்.

பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் இதுபற்றிக் கூறுகையில், 2010ல் 27.6 சதவீதமாக இருந்த 14 வயது மற்றும் அதற்கும் குறைவான அல்லது இளம் வயதினராக வகைப்படுத்தப்பட்டவர்களின் சதவீதம் 2020ல் 24 சதவீதமாகக் குறைந்துள்ளது என்றார்.

60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய மக்கள்தொகையானது 2010 இல் 8 சதவீதம் அல்லது இரண்டு மில்லியன் மக்களில் இருந்து 2020 இல் 10.4 சதவீதம் அல்லது 3.4 மில்லியன் மக்களாக அதிகரித்துள்ளது என்றார்.

“மலேசியாவின் மக்கள்தொகை 2020 இல் 32.4 மில்லியன் மக்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது, 10 ஆண்டுகளில் கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதம் (CAGR) 1.7 சதவீதமாக உள்ளது.

“மொத்த மதிப்பிடப்பட்ட மக்கள்தொகையில், 91.7 சதவீதம் அல்லது 29.8 மில்லியன் குடிமக்கள், மீதமுள்ளவர்கள் குடிமக்கள் அல்லாதவர்கள்.

“மொத்த மக்கள்தொகையில், 6.8 சதவீதம் பேர் 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள், 69.3 சதவீதம் பேர் பணிபுரியும் வயது பிரிவில் (15 முதல் 64 வரை) மற்றும் மீதமுள்ள அல்லது 24 சதவீதம் பேர் இளம் வயது பிரிவில் (14 மற்றும் அதற்கும் குறைவானவர்கள்),” என்று 2020 மலேசிய மக்கள்தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பின் முடிவுகளை இன்று அவர் உரையாற்றும்போது கூறினார்.

100 பெண்களுக்கு 110 ஆண்கள் என்ற பாலின விகிதத்தில் ஆண் மக்கள் தொகை பெண்களை விட அதிகமாக இருப்பதாகவும் இஸ்மாயில் சப்ரி தெரிவித்தார்.

அதாவது கணக்கெடுக்கப்பட்ட மொத்த மக்கள்தொகையில், அவர்களில் 53.3 சதவீதம் பேர் ஆண்கள் என்றும் மீதமுள்ளவர்கள் பெண்கள் என்றும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here