ஃபெல்டா தேர்சாங் 1, 2 மற்றும் 3 இல் அமலிலுள்ள மேம்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு பிப்.28 வரை தொடரும்

புத்ராஜெயா, பிப்ரவரி 15 :

கோவிட்-19 நோய்த்தொற்றின் அதிகரிப்பு காரணமாக, பகாங்கின் ரவூப் மாவட்டத்தில் உள்ள மூன்று இடங்களை உள்ளடக்கிய பகுதிகளில், அமலிலுள்ள மேம்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு (PKPD) பிப்ரவரி 28 வரை தொடரும் என்று தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் (MKN) டைரக்டர் ஜெனரல் டத்தோ ரோட்ஸி முஹமட் சாட் தெரிவித்தார்.

இன்று முடிவடையவிருந்த முக்கிம் பத்து தாலத்தின் ஃபெல்டா தேர்சாங் 1, 2 மற்றும் 3 சம்பந்தப்பட்ட இடங்களில் மேம்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது என்றார்.

3,000 க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் வசிக்கும் மூன்று அண்டை பகுதிகளிலும் மேம்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு நீட்டிப்பு, சுகாதார அமைச்சகத்தின் இடர் மதிப்பீட்டின் விளைவாக, கோவிட்-19 தொற்றுக்களின் பரவலின் தற்போதைய போக்கின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here