சரவாக்கில் சோகம்: காணாமல்போன 6 வயது சிறுமி ஆற்றில் சடலமாக மீட்பு!

சிபு, பிப்ரவரி 2:

சரவாக், டாரோ (Daro) பகுதியில் உள்ள காம்பங் பஞ்சோரில் வசித்து வந்த அகில்லா நசுஹா ஷம்சோல் என்ற 6 வயது சிறுமி, துரதிர்ஷ்டவசமாக ஆற்றில் மூழ்கி உயிரிழந்தார்.

நேற்று மதியம் 12 மணியளவில் சிறுமி வீட்டில் இல்லாததை அவரது குடும்பத்தினர் கவனித்தனர். அவர் பெற்றோரின் கவனத்திற்கு வராமல் வீட்டின் பின்பக்க கதவு வழியாக வெளியேறியதாக நம்பப்படுகிறது.

சிறுமியைத் தேடிய அவரது தந்தை, ஆற்றுப் பகுதியை நோக்கிச் செல்லும் சிறிய காலடித் தடங்களைக் கண்டறிந்தார். இதனால் அச்சமடைந்த அவர் உடனடியாக அதிகாரிகளுக்குத் தகவல் அளித்தார்.

நேற்று பிற்பகல் 2.28 மணிக்குத் தொடங்கிய தேடுதல் மற்றும் மீட்புப் பணி (SAR), இரண்டாம் நாளாக இன்றும் தொடர்ந்தது. இதில் தீயணைப்புத் துறை, போலீசார், சிவில் பாதுகாப்புப் படை மற்றும் கிராம மக்கள் ஈடுபட்டனர்.

இன்று மாலை சுமார் 4 மணியளவில், காம்பங் லேமாங் பெக் (Kampung Lemang Pek) அருகே ஆற்றில் சிறுமியின் உடல் மிதப்பதைக் மீட்புக் குழுவினர் கண்டெடுத்தனர்.

மீட்கப்பட்ட சிறுமியின் உடல் காம்பங் பஞ்சோர் படகுத்துறைக்குக் கொண்டு வரப்பட்டு, பின்னர் போலீஸ் வாகனம் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்தத் துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here