சாலையில் வழுக்கிய மோட்டார் சைக்கிள்: தந்தையும் 6 வயது மகனும் பலி

குவாந்தான்: புக்கிட் கெத்துபாட் சந்திப்பு அருகே ஜாலான் ஜெராண்டுட்-தெமர்லோவின்  18ஆவது கி.மீட்டரில்  நேற்றிரவு மோட்டார் சைக்கிள் சறுக்கி சாலை விளக்கு கம்பத்தில் மோதியதில் தந்தையும் அவரது சிறு மகனும் உயிரிழந்தனர். இரவு 8 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில் கட்டிடத் தொழிலாளி முஹமட் இஸ்யாம் அப்துல்லா சானி 43,  அவரது மகன் முஹம்மது ஐசி அஃப்னான் 6, ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக ஜெராண்டுட் மாவட்ட காவல்துறைத் தலைவர் சூக்ரி முஹம்மது தெரிவித்தார்.

முதற்கட்ட விசாரணையில் அந்த நபர் தனது மனைவி முனிரா மஹ்மூத் 28,  அவர்களது இரண்டு குழந்தைகளான முஹம்மது ஐசி அஃப்னான் மற்றும் முஹம்மது உமர் அஃபான் 4 ஆகியோருடன் தனது மாமியார் வீட்டிலிருந்து வீட்டிற்கு செல்லும் வழியில் மோட்டார் சைக்கிளில் சென்றது தெரியவந்தது.

முஹமட் இஸ்யாம் தனது மோட்டார் சைக்கிளின் கட்டுப்பாட்டை இழந்து, இடதுபுறமாக சறுக்கி சாலை விளக்கு கம்பத்தில் மோதியதாக நம்பப்படுகிறது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார். முனிரா மற்றும் முஹம்மது உமர் அஃபான் ஆகியோர் காயமடைந்து தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சுக்ரி கூறினார். சாலை போக்குவரத்து சட்டம் 1987 பிரிவு 41(1)ன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here