கோவிட்-19 தொற்று – நாட்டின் 32,034 இறப்புகளில் 61.3% மூத்த குடிமக்கள்; நூர் ஹிஷாம் தகவல்

இந்த ஆண்டு பிப்ரவரி 7 ஆம் தேதி நிலவரப்படி, நாட்டில் மொத்தம் 336,848 அல்லது 11.5% மூத்த குடிமக்களுக்கு கோவிட்-19 தொற்று உறுதி  செய்யப்பட்டுள்ளது என்று சுகாதார தலைமை இயக்குநர்  டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார். இன்று முகநூல் பதிவில், நாட்டில் கோவிட் -19 காரணமாக 32,034 இறப்புகளில் 16,646 அல்லது 61.3% மூத்த குடிமக்களையும் உள்ளடக்கியது என்று கூறினார்.

தடுப்பூசிக்கு 2,258,521 அல்லது 67.7% மூத்த குடிமக்கள் பூஸ்டர் அளவைப் பெற்றுள்ளனர். அதே நேரத்தில் 3,335,309 அல்லது 96% மக்கள் முழுமையாக தடுப்பூசி பெற்றுள்ளனர். கோவிட்-19 இலிருந்து மூத்த குடிமக்களைப் பாதுகாக்கவும், தடுப்பூசியை முடித்து பூஸ்டர் அளவைப் பெற்று கொள்ளுமாறு அவர் வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here