போதைப்பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த ஒரு தம்பதியர் உட்பட அறுவர் கைது ; RM521,263.02 மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல்

ஷா ஆலாம், பிப்ரவரி 18 :

பிப்ரவரி 14 அன்று, கோல லங்காட் மற்றும் தெற்கு கிள்ளான் பகுதியில் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக நம்பப்படும் கணவன் மற்றும் மனைவி உட்பட ஆறு பேரை சிலாங்கூர் போலீசார் கைது செய்தனர்.

இந்தச் சோதனையின் விளைவாக, RM521,263.02 மதிப்பிலான பல்வேறு வகையான போதைப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக சிலாங்கூர் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையின் (JSJN) தலைவரும், துணை ஆணையருமான அஹ்மட் ஜெஃப்ரி அப்துல்லா கூறினார்.

முதல் வழக்கில், ஜென்ஜரோமில் உள்ள பண்டார் சௌஜானா புத்ராவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நடத்தப்பட்ட சோதனையின் மூலம், முதல் கட்டமாக ஒரு இந்தோனேசிய நபர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

முதல் சந்தேக நபர் மதியம் 2 மணியளவில் அடுக்குமாடி குடியிருப்பின் வாகன நிறுத்துமிடத்தில் கைது செய்யப்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து அடுக்குமாடிக் குடியிருப்பின் ஒரு வீட்டில் மேலும் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர் என்று அவர் கூறினார்.

அந்த வீட்டில் நடத்திய சோதனையின் விளைவாக, 3,616 கிராம் எடையுள்ள ஹெரோயின் என சந்தேகிக்கப்படும் 8 பிளாஸ்டிக் பாக்கெட்டுகளையும், 5,000 கிராம் எடையுள்ள எக்ஸ்டசி என்று நம்பப்படும் 2 பிளாஸ்டிக் பாக்கெட்டுகளையும் போலீசார் கண்டுபிடித்தனர்.

“இந்த கைதினைத் தொடர்ந்து, பாண்டிங் பகுதியில் சாலையோரத்தில், இந்தக்குழுவின் மற்றொரு உறுப்பினரை போலீசார் கைது செய்தனர்,” என்று அவர் இன்று சிலாங்கூர் காவல் படைத் தலைமையகத்தில் (IPK) நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

முதற்கட்ட விசாரணையில் நான்கு சந்தேக நபர்களும் வேலையில்லாதவர்கள் என்றும் அவர்களில் மூவருக்கு முந்தைய குற்றவியல் மற்றும் போதைப்பொருள் பதிவுகள் இருப்பதாகவும், சிறுநீர் பரிசோதனை சோதனையில் அவர்கள் அனைவரும் போதைப்பொருளுக்கு எதிர்மறையாக இருப்பது என்று கண்டறியப்பட்டது என்றும் அவர் கூறினார்.

மேலும், போதைப்பொருள் பதப்படுத்தும் உபகரணங்கள் அவ்வீட்டில் பதுக்கி வைப்பதற்காக, அந்த வீடு இக்குழுவினால் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் கருதுவதாகவும் கூறினார்.

இதற்கிடையில், இரண்டாவது வழக்கில், ஒரு கணவன், மனைவி இரவு 9.10 மணிக்கு கிள்ளான், புக்கிட் திங்கியில் உள்ள பல்பொருள் அங்காடிக்கு அருகே சாலையோரத்தில் கைது செய்யப்பட்டதாக அஹ்மட் ஜெஃப்ரி கூறினார்.

அவர்களிடமிருந்து சந்தேகத்திற்குரிய 51.5 கிராம் எடையுள்ள சியாபு போதைப்பொருள் கொண்ட 4 பிளாஸ்டிக் பாக்கெட்டுகள் மற்றும் எரிமின் 5 என சந்தேகிக்கப்படும் 10 மாத்திரைகள் கொண்ட இரண்டு அலுமினியத் தகடுகளை போலீசார் கண்டுபிடித்தனர்.

“அதைத் தொடர்ந்து, சந்தேகநபர் கிள்ளான், பண்டார் பெஸ்தாரியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த மற்றொரு காரில் சோதனைக் குழுவை அழைத்துச் சென்றார், அங்கு 5,179.84 கிராம் எடையுள்ள ஹெரோயின் அடங்கிய 12 பிளாஸ்டிக் பாக்கெட்டுகள்; 1,080.41 கிராம் எடையுள்ள சந்தேகத்திற்கிடமான சியாபு கொண்ட ஒரு பிளாஸ்டிக் பை மற்றும் எரிமின் 5 என நம்பப்படும் 7,500 மாத்திரைகள் கொண்ட 250 அலுமினியத் தகடுகள் ஆகியவற்றைக் கண்டுபிடித்தனர்.

“சந்தேக நபர் எரிசக்தி விநியோக நிறுவனத்தில் ஒப்பந்தக்காரர் என்றும் அவருக்கு குற்றம் மற்றும் போதைப்பொருள் சம்பந்தப்பட்ட சில கடந்தகால பதிவுகளும் உள்ளது “என்று அவர் மேலும் கூறினார்.

“சிறுநீர் பரிசோதனையின் முடிவுகள், அந்த நபருக்கு மெத்தம்பேட்டமைன் நேர்மறையாக இருந்தது கண்டறியப்பட்டது, அதே சமயம் அவரது மனைவி எதிர்மறையாக இருந்தார்,” என்று அவர் கூறினார்.

முதற்கட்ட விசாரணையில் இரண்டு வழக்குகளும் வேறுபட்டவை மற்றும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை என்றும் அவர் கூறினார்.

அவரது கூற்றுப்படி, இரண்டு வழக்குகளிலும் மொத்தமாக கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மதிப்பு RM521,263.02 ஆகவும், இரண்டு கார்கள் மற்றும் நகைகள் சம்பந்தப்பட்ட ஏனைய பறிமுதல்களின் மதிப்பு RM80,350 ஆகும்,” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here