வசதி குறைந்தவர்களுக்கு 32ஆவது ஆண்டாக தொடரும் ஹரிராயா உதவித் திட்டம்: அலி மாஜு

வரவிருக்கும் ரமலான் மாத நோன்பினை முன்னிட்டு வசதி குறைந்தவர்களுக்கு 1994ஆம் ஆண்டு தொடங்கி ஹரிராயா உதவிகளை வழங்கி வருவதாக மஹாத் தஹ்பீஸ் அல் ஃப்ரீதிய்யா நிறுவனரும் அளி மாஜு உணவக உரிமையாளருமான டத்தோ அல்ஹாஜ் ஜவஹர் அலி தய்யூப்கான் @ அலி மாஜு தெரிவித்தார்.

1994ஆம் ஆண்டு இந்த ராயா உதவி திட்டத்தை தொடங்கினோம். ஆரம்பித்தில் 100 பேருக்கும் குறைவாகவே உதவிகளை வழங்கி வந்தோம். 10 ஆண்டுகளுக்குப் பிறகு 1,000த்தை தொட்ட அந்த உதவித் தொகை கடந்த இரண்டு ஆண்டுகளாக 2,500 பேராக உயர்ந்தது. கடந்தாண்டு ஏறக்குறைய 3,300க்கும் மேற்பட்டோர் உதவிகளைப் பெற்றனர்.

இனம் மதம் பாராமல் அனைவருக்கும் இந்த ஹரிராயா உதவிகளை வழங்கி வருகிறோம். கடந்த சில ஆண்டுகளாக மக்கள் வரிசையில் காத்திருப்பதை தவிர்க்க QR திட்டத்தை அறிமுகப்படுத்தோம். அதன் பதிவு இன்று தொடங்கியது. பதிவின் போது நோன்பிற்கான பேரிச்சம் பழம் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

1,000க்கும் மேற்ப்பட்டோர் வரிசையில் நினறு தங்கள் விவரங்களை பகிர்ந்து கொண்டனர். பதிவு செய்து கொண்டவர்களுக்கு 32ஆவது ஆண்டாக மார்ச் 1ஆம் தேதி ஹரிராயாவிற்கு தேவைப்படும் அத்திவாசிய உணவுப் பொருட்கள் வழங்கப்படும் என்று அலி மாஜு தெரிவித்தார்.

இன்றைய பதிவின் போது  குற்றத் தடுப்பு, சமூகப் பாதுகாப்புத் துறை (JPJKK) KL கண்டிஜெண்ட் ரவீந்தர் சிங் உள்ளிட்ட முக்கிய  அதிகாரிகளும் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here