சிலாங்கூரில் மட்டுமே வெள்ளிக்கிழமை தொழுகைக்கு பூஸ்டர் டோஸ் அமல் – ஜாகிம் கூறுகிறது

இரண்டு டோஸ்கள் மற்றும் கோவிட்-19 தடுப்பூசிகளுக்கான பூஸ்டர் டோஸ் பூர்த்தி செய்ய வேண்டிய நிலையான இயக்க நடைமுறைகள் (SOPs) சிலாங்கூரில் உள்ள மசூதிகள் மற்றும் சூராக்களுக்கு மட்டுமே பொருந்தும்  என்று (ஜாகிம்) தெரிவித்தது.

மற்ற மாநிலங்களில் உள்ள மசூதிகள் மற்றும் சூராக்களில் ஜமாஅத் தொழுகைக்கான எஸ்ஓபிகள் அப்படியே இருக்கின்றன. அவை அந்தந்த மாநில சமய அதிகாரிகளின் முடிவுகளுக்கு உட்பட்டவை என்று ஜாகிம் துணை இயக்குநர் ஜெனரல் (கொள்கை) ஹக்கிமா முகமட் யூசாஃப் கூறினார்.

நிபந்தனைகள் சிலாங்கூர் சமய அதிகாரிகளால் அமைக்கப்பட்டன என்பதையும், மாநிலத்தில் உள்ள மசூதிகள் மற்றும் சூராக்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

சிலாங்கூர் சமய அதிகாரிகளின் தீர்ப்பை ஜாக்கிம் மதிக்கிறது. மேலும் கோவிட்-19 வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் முயற்சிகள் தங்கள் நோக்கங்களை அடைவதை உறுதிசெய்ய அமைக்கப்பட்டுள்ள எஸ்ஓபிகளை (மாநிலத்தில்) கடைப்பிடிக்குமாறு இஸ்லாமியர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

செவ்வாயன்று சிலாங்கூர் இஸ்லாமிய சமயத் துறை (ஜாய்ஸ்), பிப்ரவரி 21 தேதியிட்ட சுற்றறிக்கை மூலம், பிப்ரவரி 25 முதல் மாநிலத்தில் உள்ள மசூதிகள் மற்றும் சூராக்களில் வெள்ளிக்கிழமை தொழுகையை முஸ்லிம்கள் செய்ய இரண்டு டோஸ் மற்றும் பூஸ்டர் டோஸ் போட்டிருக்க வேண்டும் என்பதனை நிர்ணயித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here