உக்ரைனில் இருந்து ஒன்பது மலேசியர்களும் அவர்களுடன் இருந்த 2 பேரும் தாயகம் திரும்பியுள்ளனர்

உக்ரைனின் கீவ் நகரில் இருந்து மலேசியர்கள் ஒன்பது பேர் மற்றும் அவர்களுடன் இருந்த இருவரும் இன்று பத்திரமாக நாடு திரும்பியுள்ளனர்.  அவர்கள் கத்தார் ஏர்வேஸ் விமானம் QR0848 வழியாக சுமார் 3.06 மணியளவில் கோலாலம்பூர் அனைத்துலக  விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

பிப்ரவரி 24 (வியாழன்) அன்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கிழக்கு உக்ரைனில் உள்ள டான்பாஸில் ஒரு சிறப்பு இராணுவ நடவடிக்கையை அறிவித்ததைத் தொடர்ந்து, உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி நாட்டில் அவசரநிலையை அறிவித்ததார். பிப்ரவரி 27 அன்று உக்ரைனின் கெய்வில் இருந்து போலந்துக்கு இந்த குழு கொண்டு வரப்பட்டது. உக்ரைன் சிவில் விமானப் பயணத்தின் அதிக ஆபத்து காரணமாக சிவில் பயன்பாட்டிற்கான வான்வெளியை மூடுவதாகவும் அறிவித்தது.

பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் மற்றும் வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் அப்துல்லா ஆகியோர் ஒன்பது மலேசியர்கள் மற்றும் அவர்களுடன் இருந்த இருவரையும் சந்திக்க KLIA இல் இருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here