ஓய்வு பெற்ற போலீஸ்காரர் ஒருவரை கொலை செய்த வழக்கில், மனநலம் பாதிக்கப்பட்டவர் என நீரூபிக்கப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவர் மரண தண்டனையிலிருந்து தப்பினார்

கோத்தா பாரு, மார்ச் 15 :

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்ற போலீஸ்காரர் ஒருவரை கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில், சம்பவத்தின் போது குற்றம் சாட்டப்பட்டவர் பைத்தியம் பிடித்தவர் என்று, உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்ததை அடுத்து, அவர் மரண தண்டனையிலிருந்து தப்பினார்.

குற்றஞ்சாட்டப்பட்ட முகமட் ரோஜானி யஹாயா, 43, என்ற ஆடவர் வெள்ளை சட்டை மற்றும் ஜீன்ஸ் அணிந்திருந்தார், நீதிமன்றத்தில் தீர்ப்பு வாசிக்கப்பட்ட பிறகு அவர் அமைதியாக காணப்பட்டார்.

குற்றச்சாட்டின்படி, ஜனவரி 25, 2018 நண்பகல் 12 மணியளவில், பாசீர் மாஸில் உள்ள கம்போங் அபா-அபா பூனுட் சூசுவிலுள்ள ஒரு வீட்டில் நடந்த ஒரு சம்பவத்தின் போது 69 வயதான அப் ஹலீம் சே யூசோஃப் என்பவரை கொலை செய்ததாக அவர் குற்றம் சாட்டப்பட்டார்.

இந்தக் குற்றத்திற்கு, குற்றவியல் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302 இன் கீழ் மரண தண்டனை விதிக்க வழி செய்கிறது.

துணை அரசு வழக்கறிஞர் கைருல் அனுவார் வஹாப் இந்த வழக்கை நடத்தினார், குற்றம் சாட்டப்பட்டவர் சார்பில் வழக்கறிஞர் ஜமேரி மாட் நவாங் ஆஜரானார்.

நீதிபதி டத்தோ வான் அகமட் ஃபாரிட் வான் சாலே வழங்கிய தீர்ப்பில், ​​”மருத்துவ நிபுணரின் சாட்சியத்தின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்டவர் குற்றமற்றவர் என்று நீதிமன்றம் கண்டறிந்தது, ஏனெனில் சம்பவத்தின் போது அந்த நபர் பைத்தியமாக காணப்பட்டார்” என்று குறிப்பிட்டார்.

“குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 348 (2) இன் கீழ், முகமது ரோஜானியை, கிளாந்தான் சுல்தான் முஹமட் V இன் உத்தரவு பெறும் வரை, பேராக், உலு கிண்டா, பஹாகியா மருத்துவமனையில் பாதுகாப்புக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது,” என்று அவர் கூறினார்.

ராஜா பெரெம்புவான் ஜைனாப் II மருத்துவமனையின் மனநலப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த குற்றம் சாட்டப்பட்டவரான முகமட் ரோஜானிக்கு, 2004 ஆம் ஆண்டு முதல் அங்கு மனநல குறைபாடு பெற்றதற்கான நோயாளி அட்டை இருப்பதாக நீதிபதி வான் அகமது ஃபாரிட் தெரிவித்தார்.

மேலும் குற்றம் சாட்டப்பட்டவருக்கு மெத்தம்பேட்டமைன் மற்றும் ஆம்பெடமைன் போன்ற போதைப்பொருட்களைப் பயன்படுத்தியதால் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை உறுதி செய்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here