இலங்கையில் நிதி நெருக்கடி: காகிதம், மை தட்டுப்பாட்டால் பள்ளி மாணவர்களுக்கு தேர்வு ரத்து..!

கொழும்பு, மார்ச் 20:

இலங்கையில் காகிதம், மை என்பவற்றை இறக்குமதி செய்ய தேவையான டொலர் கையிருப்பு இல்லாததால், பள்ளி மாணவர்களின் தவணைத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

இலங்கை 1948ம் ஆண்டு ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெற்ற பிறகு, ஏற்பட்ட மோசமான நிதி நெருக்கடி இதுவென உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளனர்.

இதனால் தாள் தட்டுப்பாடு காரணமாக இலங்கையில் திங்கட்கிழமை தொடங்க இருந்த தவணை தேர்வுகள் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளதாக இலங்கை கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நடவடிக்கை நாட்டில் உள்ள 4.5 மில்லியன் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

22 மில்லியன் டொலர் பணப் பற்றாக்குறை உள்ள இலங்கையில் மோசமடைந்து வரும் வெளிநாட்டுக் கடன் நெருக்கடியை தீர்ப்பதற்காக, அண்டை நாடுகளிடம் கடன் வாங்குவதற்காக அவைகளின் உதவியை நாடுவதாக  இலங்கை அறிவித்தது.

கடனில் சுமார் 6.9 பில்லியன் டொலர் இந்த ஆண்டு செலுத்தப்பட வேண்டும். ஆனால் இலங்கையின் டோலர் கையிருப்பு பிப்ரவரி மாத இறுதியில் வெறும் 2.3 டோலர் பில்லியனாக மட்டுமே இருந்தது என அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here