கம்போங் சுவாசாவில் திடீர் வெள்ளம் காரணமாக 43 பேர் நிவாரண மையங்களில் தஞ்சம்!

பியூஃபோர்ட், மார்ச் 23:

இங்குள்ள கம்போங் சுவாசாவில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் காரணமாக, 14 குடும்பங்களைச் சேர்ந்த 43 பேர் தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

நேற்று நண்பகல் முதல் பெய்து வரும் தொடர் மழையால் அக்கிராமம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால், அவர்கள் அனைவரும் டத்தோ முகமட் துன் பானிரிலுள்ள PPS இல் தங்க வைக்கப்பட்டதாக சபா மாநில பேரிடர் மேலாண்மைக் குழு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் வெள்ளப் பேரிடருக்குத் தயாராகும் வகையில் திங்கள்கிழமை இந்த பிபிஎஸ் திறக்கப்பட்டது என்றும் இதுவரை, ஒரே ஒரு கிராமம் மட்டுமே வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் கம்போங் சுவாசா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளின் நிலைமையை தமது துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில், Beaufort தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், நேற்று பிற்பகல் 2.53 மணிக்கு வெள்ள அனர்த்தம் குறித்து தங்களுக்கு அழைப்பு வந்தது. அதனைத் தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக Beaufort நகரத்திலிருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிராமத்திற்கு மீட்புப் பணியாளர்களை அனுப்பி வைக்கப்பட்டனர் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here