மொத்தம் 18,354 சுகாதாரப் பணியாளர்கள் தற்போது கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்துள்ளார்.
எங்கள் தரவுகளின் அடிப்படையில் மார்ச் 23, 2022 அன்று (நேற்று), மொத்தம் 19,420 சுகாதாரப் பணியாளர்கள் வேலைக்குச் செல்லவில்லை. இந்த எண்ணிக்கையில், 18,354 (94.5%) உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகள் மற்றும் 1,066 (5.5%) நெருங்கிய தொடர்புகள் என்று அவர் இன்று மாலை செய்தியாளர் கூட்டத்தில் கூறினார். மார்ச் 4 முதல், சுகாதாரப் பணியாளர்கள் பணிக்கு வராத தினசரி விகிதம் 6% ஐத் தாண்டியுள்ளது என்று கைரி மேலும் கூறினார்.